உணவில் சுவையை கூட்டுவதற்கு தினந்தோறும் சமையலுக்கு அதிகளவில் கறிவேப்பிலையை பயன்படுத்துகிறோம். சுவை மட்டுமின்றி, பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கறிவேப்பிலையில் நன்மைகள் மற்றும் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கறிவேப்பிலையின் நன்மைகள்
கறிவேப்பிலையில் வைட்டமின் A, B, C, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. ஆகையால், தினந்தோறும் இதனைப் பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடலில் உண்டாகும் பல பிரச்சனைகளை சரி செய்ய முடியும். அதோடு, தலைமுடி நன்றாக வளர்ச்சி அடைவதற்கும் இது உதவுகிறது.
கறிவேப்பிலை பல மருத்தவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கறிவேப்பிலையை ஒரு சில பொருட்களுடன் சேர்த்துக் கொண்டால், இன்னமும் பல மடங்கு நன்மையை நம்மால் பெற முடியும்.
கறிவேப்பிலையில் பீட்டாகரோட்டின் அதிகமாக நிறைந்துள்ள காரணத்தால் பார்வைத் திறனை மேம்பட வைக்கிறது.
கறிவேப்பிலையை எப்படி எடுத்து கொள்வது?
சிலர் உணவில் உள்ள கறிவேப்பிலையை ஒதுக்கி விடுவர். இவர்கள் கறிவேப்பிலையை சாப்பிட வேண்டுமெனில், இதனை அரைத்து கறிவேப்பிலை பொடியாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அப்போது யாராலும், கறிவேப்பிலையை உணவில் இருந்து ஒதுக்க முடியாது.
கறிவேப்பிலைப் பொடியை தினந்தோறும் உணவில் கலந்து சாப்பிட்டால், தலைமுடி கொட்டுவதைத் தடுக்கலாம்.
நெல்லி, கரிசாலை, கீழாநெல்லி மற்றும் அலரி இவற்றுடன் சமபங்கு கறிவேப்பிலைச் சாறு சேர்த்துக் கொண்டு, தேங்காய் எண்ணெயில் இதனைக் காய்ச்சி தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தி வரலாம்.
கறிவேப்பிலையை துவையல், பொடி மற்றும் குழம்பாக உணவில் சேர்த்து வந்தால் சாதாரண செல்கள், புற்றுநோய் செல்களாக மாறுவதை தடுக்க முடியும்.
உணவு உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிதளவு கல் உப்பு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து, சுடுசோற்றில் கலந்து சாப்பிட வைத்தால் போதும். குழந்தைகளின் பசியின்மை நீங்கி விடும்.
அஜீரணம், பேதி மற்றும் பசியின்மை ஆகியவை தான் குடல் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள. இதனைப் போக்குவதற்கு கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிடால் நல்ல பலன் கிடைக்கும்.
சுண்டல் வற்றல், மாம்பருப்பு, மாதுளை ஓடு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை கால் டிஸ்பூன் எடுத்து, மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கழிச்சல் நோய் படிப்படியாக கட்டுக்குள் வந்து விடும்.
மேலும் படிக்க
மீண்டும் உயரந்த முட்டை விலை: அதிருப்தியில் பொதுமக்கள்!
சரும அழகின் பாதுகாப்பிற்கு உப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
Share your comments