தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு குறித்த 2 நாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
வேளாண் பல்கலைக்கழகம் (Agricultural University)
கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியலை மக்களிடையேக் கொண்டுசெல்வதில், முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இங்கு மாணவர்கள் வேளாண் கல்வி பயில ஏதுவாக, இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
விதை ரகங்கள் (Seed varieties)
இதுமட்டுமல்லாமல், விவசாயம் சார்ந்த அனைத்து ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, அதிக மகசூல் பெற்று கூடுதல் வருமானம் ஈட்ட விவசாயிகளுக்கு விதை ரகங்கள் வழங்கப்படுவதுடன், அவ்வப்போது, பருவநிலைக்கு ஏற்ற ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், விவசாயத்திற்குத் தேவையான இயற்கை உரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
செப்.21 மற்றும் 22ம் தேதிகள் (Sept. 21 and 22)
முன்னோடி விவசாயிகளை உருவாக்கும் வகையில், அவ்வப்போது பயிற்சிகளும் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சியின் அம்சங்கள் (Features of training)
இதில் நெல்லி பானங்கள்- பழரச பானம் மற்றும் தயார்நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல் ஆகிய மதிப்பூட்டப்பட்டப் பொருட்களைத் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளும் கற்பிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1770 (ரூ.1,500+GST 18%) பயிற்சியின் முதல் நாளில் செலுத்திப் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
கூடுதல் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
அறுவடை பின்சார் தொழில் நுட்ப மையம்
வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் - 641 003 என்ற முகவரியிலும், 0422-6611268 என்றத் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி!
கோடிகளைக் குவிக்க உதவும் குப்பைகள் (வாழை நார்) - VAP தயாரிப்பு!
Share your comments