உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதை நாம் உணர்ந்து கொள்ள ஏதுவாக, உடலோ சில அறிகுறிகளைக் காட்டும். அதனை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாலேயே சில நேரங்களில் நோய் தொற்று முற்றும் நிலையை எதிர்கொள்கிறோம்.
அவ்வாறு எப்போது பார்த்தாலும், சோர்வடைகிறீர்களா? உடல் வலி, மன அழுத்தம், அதிகளவு முடிகொட்டுல் உள்ளிட்ட பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறீர்களா?
அப்படியானால் உங்களுக்கு வைட்டமின் D குறைபாடு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா கால ஊரடங்கு காரணமாக பொரும்பாலானோர் வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள்.
சூரிய ஒளியில் வெளியில் செல்லாததால், நம் உடலில் வைட்டமின் D கிடைக்காதே இந்த பிரச்னைகளுக்குக் காரணம்.
நம் உடலில் சூரியஒளி படும்போது மட்டுமே முக்கிய ஊட்டச்சத்தான வைட்டமின் D நமக்குக் கிடைக்கிறது.
இவ்வாறு வைட்டமின் D குறைபாடு ஏற்பட்டுவதன் விளைவாக, உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவதுடன், மற்ற நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
எனவே நம் உடலுக்கு வைட்டமின் D யை அளிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதே நோய் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். அத்துடன் காலை வேளையில் இளம் சூரிய வெயிலில் நாம் நடைபயிற்சி மேற்கொள்வதும் சிறந்தது.
அந்த வகையில், வைட்டமின் D அளிக்கும் உணவுகளின் பட்டியல்
பசும்பால்
தூய்மையான பசும்பாலை தினமும் ஒரு வேளைப் பருகுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், பசும்பாலில், வைட்டமின் D மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன.
தயிர்
குறிப்பாகக் கோடைகாலங்களில் உங்கள் உணவில், கட்டாயம் தயிர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அது, வீட்டில் தயாரிக்கப்படும் சுத்தமான மற்றும் ஃபிரஷ்ஷான (Fresh)தயிர் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். கடைகளில் விற்கப்படும் பாக்கெட்த் தயிரைக் கட்டாயம் தவிர்த்துவிடவும்.
பாலாடைக் கட்டி
சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ணும், பாலாடைக் கட்டியிலும் வைட்டமின் D அதிகளவில் உள்ளது. காட்டேஜ் சீஸ், ஃபெட்டா, ரிக்கோட்டா (Cottage cheese, Feta, Ricotta )போன்ற வகை பாலாடைக்கட்டிகளை அன்றாடம் உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ளவும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் உடலுக்கு மருத்துவப் பயன் அளிக்கும் பல விஷயங்கள் உள்ளன. குறிப்பாக ஆரஞ்சு பழத்தின் சாற்றில், வைட்டமின் D மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளன. எனவே அதிகளவில் ஆரஞ்சு சாறை எடுத்துக்கொள்ளலாம்.
மீன்
அதிக கொழுப்பு உள்ள மீன்கள், சுரா, சால்மன் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளத் தவறாதீர்கள். அதே நேரத்தில் இவற்றில் இடம்பெற்றுள்ள பாஸ்பரஸ், கால்சியம், புரோட்டீன் உள்ளிட்டவையும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அவசியமானதாகும்.
காளான்கள்
சைவ உணவைச் சாப்பிடுபவராக இருப்பின், காளான்களை எடுத்துக்கொள்ளுங்கள். காளான்களில் ஷிடேக் மஸ்ரூம் மற்றும் ராவ்மைடேக் மஷ்ரூம்களில்(shiitake mushrooms and Rawmaitake mushrooms) வைட்டமின் D அதிகளவில் உள்ளது.
முட்டையின் மஞ்சள் கரு
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் D நிறைந்துள்ளது. அதில், அதிக கலோரிகளும், கொழுப்புச்சத்தும் உள்ள போதிலும், உடலுக்குத் தேவையான புரோடீன் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகளும் இடம் பெற்றுள்ளன. எனவே நாள் ஒன்றுக்கு ஒரு அவித்த முட்டையை எடுத்துக்கொள்வது நல்ல பலனை அளிக்கும்.
மேலும் படிக்க...
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!
ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு
Share your comments