விளக்கெண்ணெயில் இருக்கும் 5 மகத்துவத்தை பின்பற்றி, கூந்தலை ஆரோக்கியமாகவும், முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து பாதுகாப்பாகவும் வைக்க என்னென்ன வழிகள் உள்ளன? எவ்வாறு பயன்படுத்தினால் நன்மைக்கிடைக்கும் வாருங்கள், இந்த பதிவில் காணலாம்.
இயற்கை நமக்கு தந்த அற்புதங்களில் ஒன்று, முடி வளர்வது ஆனால் அது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு தங்கள் அழகை பிரதிபலிக்கும் விஷயத்தில் முதன்மையானது முடி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முடி பெண்களின், முழு தோற்றத்திற்கும் கூடுதல் அழகை சேர்க்கிறது.
முடி ஆரோக்கியத்தில் மரபியல் முக்கியப்பங்கு வகிக்கிறது என ஆய்வு கூறுகிறது. மேலும் உங்கள் உணவுமுறை, வானிலை, மாசுபாடு மற்றும் முடி பராமரிப்புக்கான உங்கள் ஒட்டுமொத்த அணுகுமுறை ஆகியவற்றையும் பொறுத்தது என்பது குறிப்பிடதக்கது.
பொதுவாக தலைமுடிக்கு விளக்கெண்ணெயை யாரும் பயன்படுத்துவதில்லை, ஆனால் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த எண்ணெயில் உள்ளன என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
விளக்கெண்ணெயின் நன்மைகள் என்னென்வோ (What are the benefits of Castor Oil?)
இது முடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும் விளக்கெண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது.சேதமடைந்த முடியை சரியாக்கி பொடுகை நீக்கும் தன்மை கொண்டதாகும்.
ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம், உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது, இது விரைவான முடி வளர்ச்சிக்கு வழிவகைச் செய்கிறது. முடி வளராதவர்கள், முடி வறண்டு கணப்படுபவர்கள் மற்றும் இளநரை அதிகம் கொண்டவர்கள் விளக்கெண்ணெயை பயன்படுத்தி நன்மை பெற்றிடலாம்.
முடியை நீளமாக்கும்: (Hair Lengthening)
விளக்கெண்ணெயைக் கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்வதால் முடி வேகமாக வளருவதோடு வலுவடையும் என்பது இதன் சிறப்பாகும். முடி வளர்ச்சிக்கு, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் சில துளிகள் ஆமணக்கு எண்ணெயைக் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்து வர முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
அடுத்ததாக விளக்கெண்ணை என்னும் ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த கண்டிஷனராகும். கற்றாழை ஜெல், எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து முடியின் வேர்களில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். சிறிது நேரம் கழித்து முடியைக் கழுவவும். இது முடியை வலுவாகவும் மென்மையாகவும் மாற்றும்.
முடி உதிர்வின் முக்கிய காரணம், முடியின் வலிமைதான், அதை பெருக்க, ஆமணக்கு எண்ணெய் உதவும். இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதாகும்.
தேங்காய் எண்ணெயுடன் கலந்து விளக்கெண்ணெயை பயன்படுத்தி வந்தாலும், நல்ல பலன் கிடைக்கும். இந்த கலவை எண்ணெயின் பயனை முழுமையாக பெற, தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் வரை ஊற விடவும், அதன் பிறகு தலையை கழுவவும்.
நம்மில் பலர் செய்யும் பொதுவான தவறு (The most common mistake many of us make is) :
நம்மில் பலர் செய்யும் பொதுவான தவறு, உச்சந்தலையில் மட்டுமே கவனம் செலுத்துவது, ஆம் உச்சந்தலையில் அதிக கவனம் தேவைதான் இருப்பினும் அங்கு மட்டுமே கவனம் செலுத்துவது தவறாகும். மேலும், ஷாம்பு, கண்டிஷனர் என பலவற்றையும் உச்சந்தலையில் உபயோகிப்பது தவறாகும். அவ்வப்போது, இயற்கை முறையில் செய்யப்படும், கண்டிஷனர் மூலம் உச்சந்தலையை சுத்தம் செய்வது அவசியமாகும்.
மேலும் படிக்க:
தமிழகம்: விவசாயிகள் பயன்பெற 90 நாள் முகாம், மாணவர்கள் ஆலோசனை
எல்ஐசி-இல் கேட்டால் கொடுக்கப்படும்: கிடப்பில் கிடக்கும் ரூ 21ஆயிரம் கோடி!
Share your comments