1. வாழ்வும் நலமும்

தண்ணீர் பாலில் மூன்று மடங்கு சத்து: அவசியம் அறிவோம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Milk
Water Milk is three times more nutritious

தாய்ப்பால் போதவில்லை என்ற புகார் எல்லா அம்மாக்களும் சொல்வது தான். இந்த தவறான புரிதல், தென் மாநிலப் பெண்களிடம் அதிகம் உள்ளது.

அமுதசுரபி

தாய்ப்பால் என்பது அமுதசுரபி. எந்த அளவிற்கு குழந்தைக்கு கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு பால் (Milk) சுரந்து கொண்டே இருக்கும்.
பால் போதவில்லை, என்னால் முடியுமா என்ற தயக்கத்தில், புட்டிப் பால் கொடுக்க ஆரம்பித்தால் தான் பால் சுரப்பது குறையும். குழந்தை சப்பும் போது, பால் சுரப்பிகள் துாண்டப்படும்; தாய்ப்பால் சுரக்க ஆரம்பிக்கும்.

இயற்கையான தடுப்பூசி!

குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் பால், பால் நிறத்தில் இல்லாமல், தண்ணீர் போன்று இருக்கும். இதைப் பார்த்துவிட்டு, தண்ணீராக இருக்கிறது; பால் சுரக்கவில்லை என நினைத்து, பிறந்தவுடன் பால் பவுடர் அல்லது புட்டிப் பால் கொடுக்க ஆரம்பித்து விடுவதும் உண்டு. தண்ணீர் போல சுரக்கும் முதல் பால், குழந்தையின் இயற்கையான தடுப்பூசி (Natural Vaccine). வெள்ளையாக வரும் பாலை விட, இந்த தண்ணீர் பால் மூன்று மடங்கு அதிக சத்துள்ளது. இதை குழந்தைக்கு அவசியம் கொடுக்க வேண்டும்.

தாய் - சேய் பிணைப்பு

பசியை மட்டும் ஆற்றும் விஷயம் இல்லை தாய்ப்பால்; தாய் - சேய் பிணைப்பு. வெளியில் பார்க்கும் உலகம் முழுதும் குழந்தைக்கு புதிது. எதை பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் குழந்தைக்கு பயம், பாதுகாப்பின்மை வரும். காற்று லேசாக பட்டால் கூட பயப்படும். பரிச்சயமான ஒரே விஷயம், தாயின் உடல் சூடு. குழந்தையை எடுத்து அணைத்து வைத்து பால் கொடுக்கும் போது தான், பாதுகாப்பான உணர்வு வரும்.

புட்டிப் பால்

குழந்தை பிறந்த முதல் 15 நாட்களுக்குள் உடல் எடை குறைவது இயல்பான ஒன்று தான். பகல் நேரத்தில் நான்கைந்து தடவை சிறுநீர் தாராளமாக போகிறது; மலம் கழிக்கிறது என்றால், போதுமான அளவு பால் கிடைக்கிறது என, புரிந்து கொள்ளலாம்.

அழுகைக்கு காரணம் உடையின் அசவுகரியம், அறையின் சீரற்ற வெப்பநிலை என, எல்லா தேவைகளையும் அழுகையின் மூலமே வெளிப்படுத்தும். அதனால், எல்லா அழுகையும் பசி, பால் போதவில்லை என, தவறாக நினைக்கக் கூடாது.
தாயிடம் சற்று சிரமப்பட்டே பாலை உறிஞ்ச வேண்டியிருக்கும். இதனால் குழந்தையின் தாடைப் பகுதி வலிக்கும். ஆனால், புட்டிப் பால் குடிக்கும் போது அதிக சிரமம் இல்லாமல், குழந்தை சுலபமாக குடிக்க முடியும். சுலபமான ஒரு வழியை காட்டினால், குழந்தை அதைத்தான் விரும்பும். நான்கைந்து முறை புட்டிப் பால் கொடுத்த பின், தாய்ப்பால் கொடுத்தால் குடிக்காது.

  • அதிகபட்சம் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்தே ஆக வேண்டும்.
  • முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். கஞ்சித் தண்ணீர், தண்ணீர் என, எதுவும் கொடுக்கக் கூடாது.
  • ஆறு மாதங்களுக்கு முன் தண்ணீர் கொடுத்தால், உணவுக் குழாயில் சீழ் பிடித்து, குடலின் ஒரு பகுதியை வெட்டி எடுக்க வேண்டிய நிலைமை வரும்.

கூகுள்

இளம்பெண்கள் ஆர்வமாக 'கூகுள்' (Google) செய்து, தாய்ப்பாலின் தேவையை அறிந்து, ஆர்வமாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கின்றனர்; அதே சமயத்தில், நான்கு மாதங்களுக்குள் நிறுத்தியும் விடுகின்றனர். என்ன உடையில் வசதியாக பால் தர முடியுமோ, அதை அணிந்து, எந்தவித தயக்கமும் இல்லாமல், எந்த இடத்தில் குழந்தை அழுகிறதோ, அங்கு பால் கொடுக்கலாம்; இதற்கான சூழல் வந்தால் பிரச்னையே இருக்காது.

டாக்டர் திவ்யா அருண்,
மகப்பேறு மருத்துவர்,
சென்னை
94449 82828

மேலும் படிக்க

உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள இன்டெர்வெல் டிரைனிங்!

English Summary: Water Milk is three times more nutritious: we know! Published on: 16 August 2021, 03:11 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.