இயற்கையின் விநோதங்கள் எண்ணிலடங்கா. அதனை நாம் புரிந்துகொண்டால், அதன் போக்கைக் கண்டுபிடித்துவிட்டால், எல்லாப் பிரச்னைகளையும் நம்மால் எளிதாக எதிர்கொள்ள நேரிடும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு உச்சக்கட்டக் குளிரையும், குறிப்பிட்ட சில மாதங்களுக்கு அதிகபட்ச வெப்பத்தையும் வாரி வழங்குவது இயற்கையின் குணாதிசயம். இதை எதிர்கொள்ள வேண்டுமானால், நாமும் இயற்கையின் போக்கிலேயே செல்லதே நல்லது.
உணவு
ஏனெனில் இயற்கை, கொளுத்தும் வெயிலைக் கொடுக்கும்போது, அதனை எதிர்கொள்ள உதவும் பழங்களையும், அதாவது நமது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் பொருட்களையும் வழங்குகிறது.எனவே அதனையும் தேடிச் சென்று ருசிப்பது வெயிலில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும்.
உதாரணமாக, கோடையில் கிடைக்கும் மாம்பழங்களை, அவற்றின் தோலுடன் கடித்துச் சாப்பிடுவது, உடல் சூட்டைத் தணிக்க உதவும். உதாரணமாக, மாம்பழம் உடல் சூட்டை அதிகரித்தாலும், அதன் தோல், சூட்டைத் தணிக்கச் செய்யும்.
அந்த வகையில் கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள பின்வரும் சில வழிகளை நாம் கடைப்பிடிக்கலாம்.
- வெயில் முடியும் வரை நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் பருகுங்கள்
- நீர் மோர், பானகரம் உள்ளிட்ட நீர் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
- காலையில் நீர் ஆகாரம் அல்லது இளநீர், மதிய வேளையில் தயிரையும், இரவு வேளையில் நுங்கு, தர்பூசணிச்சாறு ஆகியவற்றையும் எடுத்துக்கொள்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- ஃப்ரிட்ஜில் வைக்கும் தண்ணீரைக் காட்டிலும், மண் பாணையில் சேமிக்கப்படும் தண்ணீரைக் குடிக்கலாம்.
- தினமும் 2 அல்லது 3 முறை குளிக்க வேண்டியது அவசியம். முடிந்தால் தலையை அலசுவதைக் கடைப்பிடியுங்கள்
- அதிக நேரம் ஏசியில் இருப்பவர்கள், வெயில் இல்லாத காலை மற்றும் மாலை வேளைகளில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்
முழுக்க முழுக்க பருத்தி ஆடைகளை அணியுங்கள். மேலும் ஜீன்ஸ் போன்ற ஆடைகளையும், இறுக்கமான ஆடைகளையும் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
இந்த முறைகள் அனைத்தும் இயற்கையான வழிகளில் நம்மைக் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்துத் தற்காத்துக்கொள்வதற்கான வழிகள் ஆகும்.
மேலும் படிக்க...
ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்- விவசாயிகளின் பரிதாப நிலை!
ஒரு லட்சம் ரூபாய் பைக்கிற்கு, ஒரு கோடி ரூபாய்க்கு நம்பர் பிளேட்!
Share your comments