நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளும் உங்கள் உடலில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சமயம், ஆரோக்கியமான உணவுகள் உங்கள் சமையல் அறையிலேயே நிரம்பியுள்ளன. இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. சில உணவுகளை நீங்கள் தினசரி எடுத்துக் கொள்ளும்போது, அது உங்கள் உடலுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சியை கொடுப்பதாக அமையும்.
கேழ்வரகு (Raagi)
தென்னிந்திய மக்களின் சிறுதானிய உணவுப் பழக்கத்தில் மிகவும் இன்றியமையாத ஒரு உணவுப் பொருள் இது. கேழ்வரகில் அதிக புரதச்சத்து நிரம்பியுள்ளது என்பதோடு மட்டுமல்லாமல், விட்டமின் சி, பி-காம்ப்ளக்ஸ், விட்டமின் இ, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவை உள்ளன. இது உங்கள் தலைமுடிக்கும், சரும நலனுக்கும் நல்லது. உங்கள் நரம்பு மண்டலத்தை இயல்பாகவே சுறுசுறுப்பாக மாற்றக் கூடிய ஆரோக்கியமான காலை உணவு கேழ்வரகு தான்.
வெல்லம் (Jaggery)
சர்க்கரையை போல அல்லாமல், வெல்லத்தில் கலோரி சத்துக்கள் சற்று குறைவாக இருக்கும். இதில் குறிப்பிடத்தக்க அளவு ஆன்டி-ஆக்ஸிண்டண்ட் மற்றும் மினரல்கள் போன்றவை அடங்கியுள்ளன. நீங்கள் இதை அப்படியே வெறும் வாயில் மென்று அல்லது சுவைத்து சாப்பிடலாம். உணவுகளுக்கு இனிப்பு சுவையூட்டவும், மனமூட்டவும் இது உதவிகரமாக இருக்கும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக் கூடியது. உங்கள் ரத்தம் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்யும்.
பேரிச்சை (Dates)
நார்ச்சத்து நிரம்பிய பேரீச்சை பழங்களை நீங்கள் எளிதில் மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஸ்நாக்ஸ் போலவும் சாப்பிடலாம். இந்த பழங்களை சாப்பிட்டு வந்தால் ஞாபகத்திறன், கற்றல் திறன் அதிகரிக்கும் என்றும், மூளையின் நினைவுகளை பாதிக்கக் கூடிய அல்சைமர் நோய் வராமல் தடுக்க முடியும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேங்காய் (Coconut)
இளநீர், தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பால் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகிய எந்த வடிவத்திலும் இதை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மேங்கனீஸ், மெக்னீசியம், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. நீங்கள் தினசரி இளநீர் அருந்தினால், உங்கள் மனதில் உள்ள கவலை ரேகைகளை மறையத் தொடங்கும்.
மேலும் படிக்க
உடலுக்கு நன்மை அளிக்கும் சிறந்த ஸ்நாக்ஸ் பார்ட்னர் பிஸ்தா பருப்பு தான்!
Share your comments