குளிர்காலத்தில் உடலுக்கு உள் வெப்பம் இருக்க வேண்டியது அவசியமாகும். நம் உடலின் வெப்பம் தக்கவைக்கப்பட்டால், நாம் நோய் வாய்ப்பட வாய்ப்பில்லை. இத்தகைய சூழ்நிலையில், நம்மை சூடாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. சில குறிப்பிட்ட உணவுகளை நாம் குளிர்காலத்தில் (Winter) சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்கு பயனளிக்கும். அவை என்னவென்று என்பதை இங்கே பார்க்கலாம்.
உலர் பழங்கள்:
அனைத்து மருத்துவர்களும் குளிர்காலத்தில் (Winter) உலர் பழங்களை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ், ஒமேகா 3 எஸ், மெக்னீசியம், தாமிரம், ஃவுளூரைடு, துத்தநாகம், கால்சியம், செலினியம் மற்றும் பல ஆரோக்கியமான புரதங்கள் இவற்றில் உள்ளன.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவது குளிர்காலத்தில் மிகவும் நன்மை பயக்கும். குளிர்காலத்தில், ஆரோக்கியத்திற்காக இதை சாப்பிடுவது நல்லது. இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஏ, பொட்டாசியம், சோடியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து உள்ளன.
காளான்:
காளான்களில் (Mushroom) அதிக அளவு வைட்டமின் டி உள்ளது. எனவே குளிர்காலத்தில் காளான் கட்டாயம் சாப்பிட வேண்டும். செலினியம் இவற்றில் நிறைந்துள்ளது.
முட்டை:
குளிர்காலத்தில் தவறாமல் முட்டைகளை (Egg) சாப்பிட வேண்டும். இது வைட்டமின் A, B12, B6, E, K ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சலினியம், கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் உள்ளன.
பருப்பு வகைகள்:
குளிர்காலத்தில் சாப்பிட பயறு மற்றும் பருப்பு வகைகள் சிறந்தவையாகும். இவை புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாக உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், தியாமின், ரைபோஃப்ளேவின் மற்றும் பி 6 போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இவற்றில் உள்ளன.
மேலும் படிக்க
சரும புற்றுநோய்க்கு நவீன தொழில்நுட்ப முறையில் கதிரியக்க சிகிச்சை!
பற்களில் வேர் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம்
Share your comments