சமீபத்திய நாட்களில் “மெட்ராஸ் ஐ” சென்னை மற்றும் பிற இடங்களில் பெருமளவில் பரவி வருகின்றது. இதன் தீவிரத்தை உணர்ந்த சுகாதாரத் துறை மெட்ராஸ்-ஐ நோய் பரவுவதை கட்டுப்படுத்த பல விதமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த சமயத்தில் மெட்ராஸ்-ஐ ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மெட்ராஸ்-ஐ (Madras Eye)
பொதுவாக மெட்ராஸ்-ஐ வந்து விட்டால் கண்கள் சிவப்பு நிறத்தில் மாறி விடும். மேலும் கண்களில் எரிச்சல், எப்போதும் நீர் வடிந்து கொண்டே இருத்தல் மற்றும் உறுத்துவது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு மெட்ராஸ் ஐ இருப்பது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
ஒரு வேலை உங்களுக்கு மெட்ராஸ் ஐ வந்து விட்டால் உங்கள் கைகளை எப்போதும் சுத்தமாக வையுங்கள். அவ்வப்போது கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக் கொண்டே இருங்கள். மெட்ராஸ் ஐ வந்தவர்கள் குறிப்பாக தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் பிறருக்கு இந்த நோய் பரவாமல் தடுக்கலாம்.
மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்ட நபர்கள் தனக்கென்று தனியாக பொருட்களை வைத்து பயன்படுத்த வேண்டும். அவர் பயன்படுத்திய பொருட்களை பிறர் பயன்படுத்தக்கூடாது. மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் கைகளைக் கொண்டு கண்களை தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் கண்கள் உறுத்துவது போல இருந்தாலும் அதனை கசக்க கூடாது. மூன்று நாட்கள் ஆகியும் நோயின் தீவிரம் குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
மேலும் படிக்க
அரைமணி நேர நீச்சல் பயிற்சி போதும்: பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்!
மாதம் ரூ.100 செலுத்தினால் போதும்: ரூ.3000 பென்சன் கிடைக்கும்!
Share your comments