பீட்ரூட் ஜூஸில் உள்ள சோடியம் மற்றும் கால்சியத்தின் அளவு இரத்த நாளங்களின் சுவர்களில் படியும் கால்சியத்தை நீக்குகிறது.
ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக கருதப்படும் காயான பீட்ரூட் மிகசிறந்த ஆரோக்கியமான வேர் காய்கறியாகும். நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பீட்ரூட்டை சிலர் சாலட் வடிவில் எடுத்து கொள்கிறார்கள். சிலர் பொரியல் செய்து, மேலும் சிலர் ஜூஸ் ஆக குடித்து வருகின்றனர். பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி6, வைட்டமின் பி9, வைட்டமின் சி, பீடைன் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்தது தான் பீட்ரூட். இரத்த சோகை பிரச்சனை, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இது குறைக்கும். இரத்த நாளங்களுக்கு ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்துவதில் பீட்ரூட்டில் இருக்கும் ஃபோலேட் முக்கிய பங்கு வகுக்கிறது.
பீட்ரூட் ஜூஸில் உள்ள சோடியம் மற்றும் கால்சியத்தின் அளவு இரத்த நாளங்களின் சுவர்களில் படியும் அதிகப்படியான கால்சியத்தை நீக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்க மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பீட்ரூட் மிகவும் உதவியாக உள்ளது. இப்போது வரை வழங்கப்பட்ட தகவல் அனைத்தும் பீட்ரூட்டின் நன்மைகளை பற்றியதாகும். பீட்ரூட் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் அதே நேரத்தில், பீட்ரூட் ஏற்படுத்தும் சில பக்கவிளைவுகளையும் நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம். குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிலர் எக்காரணம் கொண்டும் பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ளக் கூடாது.யாரெல்லாம் பீட்ரூட்டை தவிர்க்க வேண்டும்.
குறைந்த இரத்த அழுத்த நோயாளிகள்(Patients with low blood pressure)
உயர் இஇரத்த அழுத்தம் கொண்டவர்கள் பீட்ரூட்டை சாப்பிட்டால் அவர்களுக்கு அது இரத்த அழுத்ததை குறைத்து நன்மை பயக்கும். ஆனால் குறைந்த இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். ஏனென்றால் இவர்கள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது இரத்த அழுத்தத்தை இன்னும் குறைக்கிறது. எனவே குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் டயட்டில் இருந்து பீட்ரூட்டை தவிர்ப்பது நல்லது.
கல் இருக்கும் நோயாளிகள்(Patients with stone)
உடல் உள்ளுறுப்புகளில் கல் இருக்கும் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ள கூடாது என்பதில் கவனம் தேவை. பித்தப்பை அல்லது சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பீட்ரூட்டில் ஆக்சலேட்டின் அளவு அதிகமாக இருப்பதால் சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளில் காணப்படும் கற்கள் பிரச்சனையை இது அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள்(People with allergy problem)
ஒருவருக்கு ஏதேனும் அலர்ஜி அல்லது ஸ்கின் ரேஷ் பிரச்சனை இருந்தால் தங்கள் உணவில் பீட்ரூட் சேர்த்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. அலர்ஜி உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது அலர்ஜி பிரச்சனையை அதிகரிக்க செய்யலாம்.
நீரிழிவு நோயாளிகள்(Patients with diabetes)
நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்யும். பீட்ரூட்டில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இதை சாப்பிடுபவர்களின் உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிட விரும்பினால் தங்கள் நிலைமைக்கேற்ப மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவதா அல்லது வேண்டாமா என்பது தீர்மானித்து உட்கொள்வது நல்லது.
மேலும் படிக்க:
Share your comments