அசைவப் பிரியர்களைப் பொருத்தவரை முட்டை தினமும் வேண்டும். ஆனால், மஞ்சள் கரு அதிகக் கொலஸ்ட்ரால் எனவும் கூறப்படுகிறது. எனவே முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமா அல்லது முழு முட்டையும் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.
முட்டையின் வடிவமைப்பு
ஒரு முட்டையின் பிரகாசமான மஞ்சள் கருவைச் சுற்றியுள்ள வெள்ளை திரவம், சுமார் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 10 சதவீதம் புரதத்தால் ஆனது. பயோட்டின் பிணைப்பு புரதமான அவிடின் அவற்றில் உள்ளது. முழு முட்டைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வளமான ஆதாரம் மட்டுமல்ல, இதில் புரதம் மற்றும் கலோரிகள் அதிகளவில் உள்ளன. மறுபுறம், முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின்கள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும்.
ஆகவே, முழு முட்டை உடலுக்கு அதிக புரதத்தை அளிக்கும். அதே வேளையில், அவை அதிக கலோரிகளையும் கொண்டு வருகின்றன. முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதம் ‘உயர்தர முழுமையான புரதம்’ என்றும் கருதப்படுகிறது, அதாவது உடலுக்குத் தேவையான அளவு ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.
தேர்வு செய்வது எப்படி?
முழு முட்டைகளை உண்பது, உங்களை முழுதாக உணர வைப்பதோடு குறைவான கலோரிகளை உட்கொள்ள உதவுகிறது. தசையைப் பராமரிப்பதற்கும் கட்டியெழுப்புவதற்கும், உணவில் போதுமான புரதத்தைப் பெறுவது அவசியம், குறிப்பாக ஒருவர் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது. இதைக் கருத்தில் கொண்டு, எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்த வழி என்று கூறலாம்.
மஞ்சள் கரு
மஞ்சள் கரு முக்கியமாக கொழுப்பு மற்றும் சில புரதங்களால் ஆனது. அவை பயோட்டின் உட்பட பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன. முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு அனைத்தும் மஞ்சள் கருவில் காணப்பட்டாலும், முட்டையின் வெள்ளைக்கருவில் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் இல்லை. மேலும் அவற்றில் கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரையும் இல்லை. அதிக புரதம் தேவைப்படுபவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவைத் தேர்வு செய்யலாம்.
தகவல்
லோவ்னீத்
ஊட்டச்சத்து நிபுணர்
மேலும் படிக்க...
Share your comments