1. வாழ்வும் நலமும்

உணவு பழக்க முறையில் கேழ்வரகு ஏன் அவசியம்? அது செய்யும் மேஜிக் தெரியுமா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

finger millet uses

சிறுதானிய வகைகளில் கேழ்வரகு ஒரு சிறந்த தானியமாகும். கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெத்தியோனைன் என்ற அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில் கேழ்வரகு எந்த வகையில் நமது உடலுக்கு நன்மை பயக்கிறது? எந்த இரகம் விவசாயிகளுக்கு ஏற்றது என்பது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் குழு க்ரிஷி ஜாக்ரனுடன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு-

கேழ்வரகு நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பருவங்களில் வளர்ந்து வருகிறது. இது ஒரு மானாவாரி பயிராகவும், கோடைகால பாசனப் பயிராகவும் நடவு செய்யப்படுகிறது.

கேழ்வரகு 110 நாட்கள்:

இதுவரை கோ (ஆர்) 15 இரகமும், பையூர் 2 இரகமும் மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்ற இரகமாக வெளியிடப்பட்டுள்ளது.

  • கோ (ஆர்) 14 இரகம் தானிய விளைச்சல் 2794 கிலோ/எக்டர் மற்றும் வைக்கோல் விளைச்சல் 8503 கிலோ/எக்டர் தரவல்லது.
  • பையூர் (ஆர்) இரகம் தானிய விளைச்சல் 2527 கிலோ/எக்டர் மற்றும் வைக்கோல் விளைச்சல் 4200 கிலோ/எக்டர் தரவல்லது.

கிராமங்களில் வாழும் விவசாய மக்களின் முக்கிய உணவு கேழ்வரகு. இந்த உணவினால் உடல் வழுப் பெற்று நோய்களின் தாக்கமின்றி ஆரோக்கியமாக வாழலாம். அவற்றின் விவரம்-

உடல் வலுப்பெற:

கேழ்வரகை தினமும் ஒருவேளை உணவாக சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இது எளிதில் செரிமானம் ஆகாது, உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும். உடலுக்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும் சீரான அளவில் கிடைக்கும்.

நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த:

இன்று நம் தென்னிந்தியாவில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் 64 சதவீதம் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் ஏற்பட்ட மாற்றமும் கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை தவிர்த்ததன் விளைவு தான். கேழ்வரகு உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். கேழ்வரகை தினமும் காலை உணவாக உண்டு வந்தால் நீரழிவு நோயின் தாக்கம் எளிதில் குறையும்.

பித்தம் சம்மந்தப்பட்ட நோய்களைத் தடுக்க:

மனித உடலில் வாதம், பித்தம், கபம் என மூன்று கூறுகள் உள்ளன. இவை மூன்றும் சரியான அளவில் இருக்கவேண்டும். மாறியிருந்தால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகும். இவற்றில் பித்தம் மேலோங்கினால் பலநோய்கள் வரும். இதை சமப்படுத்தும் குணம் கேழ்வரகுக்கு உண்டு.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

கேழ்வரகை நன்கு மாவாக்கி தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல் புண் (அல்சர்) ஆறும். சருமம் பளபளப்பாகவும் பாதுகாப்புடனும் இருக்கும். சிறுகுழந்தைகளுக்கு பாலுடன் கேழ்வரகுமாவை சேர்த்து காய்ச்சி கொடுத்தால் குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

கட்டுரை பொறுப்பு:

முனைவர்.செ.தமிழ்ச்செல்வி¹, முனைவர்.செ.சுதாஷா2, முனைவர் வி.அ.விஜயசாந்தி1, முனைவர்.க.சிவகாமி¹, முனைவர்.அ.புனிதா¹, க.ஆனந்தி3 மற்றும்  முனைவர்.ப.யோகமீனாட்சி² . 1 வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், 3வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சனூர், 2நெல் ஆராய்ச்சி நிலையம், திரூர்.

Read more:

நெருங்கும் இறுதி தேதி- பயிர் காப்பீட்டினை விவசாயிகள் மேற்கொள்ள அரசு புது முன்னெடுப்பு!

எண்ணெய் பனை சாகுபடி: விவசாயிகளை ஊக்குவிக்க மானியம் வழங்கும் தோட்டக்கலைத்துறை

English Summary: Why is Finger millet necessary In our food habits system

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.