பருவகால உணவுகள் என்று தனியாகவே பாரம்பரியமாக உண்டு. அதை சரியான நேரத்தில் தனியாகவோ உணலில் சேர்த்தோ எடுத்துகொள்வதன் மூலம் நோய் வராமல் தவிர்த்து கொண்டவர்கள் நம் முன்னோர்கள். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) பெருமளவு உணவின் மூலமாகவே பெறுகிறோம். கப உடலை கொண்டிருப்பவர்களை அதிக பாதிப்புக்குள்ளாக்கும் இந்த குளிர்காலத்தில் என்ன மாதிரியான உணவு பொருள்களை அடிக்கடி சேர்க்க வேண்டும். எது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது என்று பார்க்கலாம்.
சீரகம்
மழைக்காலம் போன்று குளிர்காலங்களிலும் செரிமானம் குறைவாக இருக்கும். உணவில் ஊட்டச்சத்துக்கள் (Nutrients) உடல் சீராக உறிஞ்சுவதன் மூலமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அதற்கு செரிமானம் தான் முக்கியமானது. உணவின் தன்மை எப்படி இருந்தாலும் அதை செரிமானமாக்கும் உணவு பொருளை உடன் சேர்ப்பதன் மூலம் செரிமான பிரச்சனை இல்லாமல் பார்த்துகொள்ளலாம்.
மஞ்சள்
மஞ்சள் (Turmeric) இயற்கையாகவே பெரும்பான்மை உணவுகளில் சேர்த்து வருகிறோம். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி (Gem Killer) என்பதோடு தொற்றூ கிருமிகளை எதிர்த்து போராடி நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும் பொருள். அதனால் மஞ்சளை தனித்து பாலோடு கலந்து தினமும் குடிப்பது கப நோயை தடுக்க, கட்டுப்படுத்த உதவும்.
பூண்டு
பூண்டை தினமும் வெறும் வயிற்றில் பச்சையாக ஒன்று அல்லது வறுத்து ஒரு பல் சாப்பிடலாம். பூண்டை நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு பூண்டை தேனில் (Honey) ஊறவைத்து கொடுக்கலாம். அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை பசும்பாலில் 2 பூண்டு பல்லை வேகவைத்து நாட்டுச்சர்க்கரை, சிட்டிகை மஞ்சள் சேர்த்து கொடுக்கலாம்.
மிளகு
மிளகு (Pepper) விஷத்தையும் (Poison) முறிக்கும் என்னும் குணம் கொண்டவை. குளிர்காலத்தில் இயல்பாகவே தொண்டை வலி தொண்டை கமறல் உண்டாகும். இதை எதிர்கொள்ள மிளகை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். மிளகு சேர்த்த சூப், மிளகு சேர்த்த ரசம் போன்றவற்றை எடுத்துகொள்ள வேண்டும்.
இஞ்சி
இஞ்சி (Ginger) எதிர்ப்புசக்தி நிறைந்த பொருள். குளிர்காலங்களில் உணவு செரிமானம் தாமதமாகும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானம் (Digestion) ஆவதில் மேலும் தாமதம் உண்டாகும். அப்போது இஞ்சியை உணவில் சேர்க்கும் போது இது கொழுப்பை கரைத்து வெளியேற்றுவதால் செரிமானம் வேகமாகிறது. வைட்டமின் சி (Vitamin C) நிறைந்த இஞ்சி கை வைத்தியத்தில் முதல் இடம் பெற்றுள்ளது.
மூலிகை டீ
குளிர்காலத்தில் காஃபி குடித்தாலே இதமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இந்த காலத்தில் உடலுக்கு இதமளிக்க இஞ்சி எலுமிச்சை சேர்த்த தேநீர் குடிக்கலாம். துளசி, புதினா டீ வகைகளை குடிக்கலாம். க்ரீன் டீ குடிக்கலாம். காஃபி டீ தான் வேண்டும் என்பவர்கள் சுக்கு மல்லி காஃபி குடிக்கலாம். வாரம் ஒருமுறை இஞ்சி, உலர் திராட்சை, மிளகு, அன்னாசிப்பூ, ஏலக்காய், ஒரு பட்டை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம். இது உடலுக்கு அதிக பலத்தை தரும் சிறந்த மூலிகை டீ (Green Tea) அல்லது கஷாயம் என்றும் சொல்லலாம்.
இவை எல்லாம் வீட்டில் இருக்க கூடிய பொருள்கள் தான். ஆனால் சரியான முறையில் சரியான நேரத்தில் பயன்படுத்தினால் பலனும் சிறப்பாக கிடைக்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கசப்புத் தன்மையில்லாத பழுபாகற்காய்!
Share your comments