1. வாழ்வும் நலமும்

ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி இன மக்கள் பயன்படுத்திய கள்ளிமுள்ளியான்

KJ Staff
KJ Staff
caralluma adscendens

கள்ளி வகையை சார்ந்த ‘காரலுமா பிம்பிரியாடர்’

கள்ளிமுள்ளியானின் தாவர பெயர் ‘காரலுமா பிம்பிரியாடர். உடல் பருமன் என்பது தற்போது மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் பருமன் என்பது முதலில் தனி பிரச்சினையாக தெரிந்தாலும் இது, சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு அதிகரிப்பு போன்ற பாதிப்புகளையும் கூடவே உருவாக்கிவிடுகிறது. முரண்பாடான உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு குறைந்ததால், உடல் பருமன் பிரச்சனை உருவாவது குறிப்பிடவேண்டியவை.

ஜீரண கோளாறு

முரண்பாடான உணவுப் பழக்கத்தால் முதலில் நமக்கு உருவாகும் பாதிப்பு தான் ஜீரண கோளாறு. இந்த கோளாறு ஏற்படும்போது பித்தம் சரியாக இயங்காது. அதனால் பசி குறையவோ அல்லது அதிகரிக்கவோ செய்யும். அப்போது உடலியக்கத்தில் ஏற்படும் பல்வேறு மாற்றங் களால் உடல் பருமனாகிறது. உடல் எடை எல்லையை மீறும்போது உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தல் முக்கிய பங்காக கருதப்படுகிறது. மேலும், இந்த உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி போன்ற பல விஷயங்கள் செய்து வந்தாலும், மறுபுறம், உடல் எடையை குறைக்க மருந்துகளும் தரப்படுகின்றன. அதன் அடிப்படையில் உடலை குறைக்க சிறந்த மருந்தாக செயல்படுகிறது கள்ளி முள்ளியான் தாவரம்.

Kullee Mooliyan plant

பிரண்டையை போல காட்சியளிக்கும் கள்ளிமுள்ளியான்

உடல் எடையை குறைக்க மிக சிறந்த மூலிகை மருந்தாக இருப்பது கள்ளி முள்ளியான். கள்ளி வகையை சார்ந்த கள்ளிமுள்ளியான் தாவரத்தின் அடிபாகம் பட்டையாகவும், மேல்பாகம் மெல்லியதாகவும் இருக்கும். ஏறக்குறைய பிரண்டையை போலவே தோற்றமளிக்கும். கிராமங்களில் இதை அப்படியே ஒடித்து மக்கள் சாப்பிடுவார்கள். புளிப்பு சுவையுடையது. உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்கக்கூடியது. பித்தத்தை சமநிலைப்படுத்தவும் செய்யும். ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி இன மக்கள் இந்த தாவரத்தை பசியினை நீக்கவும், தாகத்தை உண்டு செய்யாமல் தடுக்கவும், சோர்வு மறையவும் பெரும் அளவு பயன்படுத்துகிறார்கள். கிராமங்களில் இதை அப்படியே ஒடித்து மக்கள் சாப்பிடுவார்கள்.

கள்ளி முள்ளியான் உட்கொள்வதால் கிடைக்கும் பலன்கள்

  • கள்ளிமுள்ளியானில் பிரக்கினேன் கிளைகோசைட் என்ற தாவர வேதிப் பொருள் உள்ளது. இது கொழுப்பை உருவாக்கும் சிட்ரேட் லயேஸ் என்ற ஜீரண நீரை தடை செய்கிறது. அதனால் உடலில் கொழுப்பு உருவாகுவது தடை செய்யப்படுகிறது.
  • உடல் பருமனால் அவதிப்படுகிறவர்களுக்கு பசி உணர்வு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும், அடிக்கடி சாப்பிடும் பழக்கம் இருக்கும். அதனை கட்டுப்படுத்த, கள்ளிமுள்ளியானை சாப்பிட்டால், மூளைக்கு பசியை அறிவிக்கும் ஹார்மோனின் சுரப்பை அது குறைத்துவிடும்.
  • இதனை சாப்பிட்டால் வயிற்றுப் பகுதி மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பு கரைந்து தசைகள் வலுவாகும்.
  • கள்ளிமுள்ளியான் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை சாப்பிடுவதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. அதனால் இதில் இருக்கும் சத்துக்களை பிரித்தெடுத்து பல்வேறு மருந்துகளில் சேர்க்கிறார்கள்.
  • புளிப்பு சுவையுடைய இந்த தாவரம், உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்கக்கூடியது.

கள்ளிமுள்ளியானின் இந்த சக்தியை மக்கள் உணர்ந்துள்ளதால், உலகம் முழுக்க இதற்கு அதிக மவுசு ஏற்பட்டிருக்கிறது. இந்த தாவரத்தினை வீடுகளிலும் வளர்க்கலாம். உடல் எடையினை குறைக்க என்ன வேண்டுமானாலும் செய்ய மக்கள் தயாராக உள்ள நிலையில், இன்று வியாபார பயிராக பெருமளவு கள்ளிமுள்ளியான் பயிரிடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

M.Nivetha
nnivi316@gmail.com

English Summary: Worrying about Obesity? Here you have wonderful Traditional Remedy Published on: 07 February 2020, 05:12 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.