கண்டிப்பாக சிரிக்கும்போது பற்கள் வெளியில் தெரியும். அவ்வாறு சிரிக்கும் போது, பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை காண்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும்.
மஞ்சள் கறை (Yellow stain)
பற்கள் மஞ்சளாக கறையுடன் இருந்தால், ஆசையாக முத்தம் கொடுக்க வரும் துணை கூட கொடுப்பதற்கு தயங்குவார்கள். அதுமட்டுமின்றி, தனது பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கின்றது என அறிந்தால் நம் கவனம் முழுவதும் நமது பற்களை பார்த்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்? என்ற மனநிலையிலே பிறரிடம் ஒழுங்காக பேச முடியாமல் போய்விடும்.
இப்படி பற்கள் மஞ்சளாக இருப்பதற்கான முக்கிய காரணம் சாப்பிட்டவுடன் வாய்கொப்பளிப்பதை மறந்துவிடுதல். டீ, காப்பி, பல நிறங்களில் குளிர்பானங்கள் இவற்றை அருந்தியபின்பு பற்களை சுத்தம் செய்வதில்லை. புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு அனைத்து பற்களுமே மஞ்சள் நிறத்தில் கறை படிந்துவிடும்.
மஞ்சள் கறையை நீக்க (Remove yellow stains)
எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதன் மூலமும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.
மேலும் காலையில் எழுந்ததும், உறங்குவதற்கு முன்பும் பல் துலக்க வேண்டும். அதேபோல் எது சாப்பிட்டாலும் உடனடியாக வாய்கொப்பளிக்க வேண்டும். புகைப்பழக்கம், வெற்றிலை பாக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க
தீராத நோய்களை சுக்குநூறாக்கும் சுக்குவின் அற்புதப் பயன்கள்!
https://tamil.krishijagran.com/health-lifestyle/the-amazing-benefits-of-dried-ginger-in-curing-chronic-diseases/
Share your comments