ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தால், அவரை உடனடியாக இரும்பு பெட்டிக்குள் அடைத்து வைக்கும் கொடுமை இந்த நாட்டில் நடக்கிறது.
கொரோனா பாதிப்பு (Corona vulnerability)
உலகமே இன்று கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் அவதிப்படுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் சீனாதான். அங்கிருந்து வேகமாகப் பரவிய வைரஸால், இன்றைய நிலவரப்படி, 31 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா பாதிக்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால் சீனாவைத் தாய்வீடாகக் கொண்டக் கொரோனாவை அந்த நாடு கிடுகிடுவென ஒழித்தது. இந்நிலையில் தற்போது 3 -வது அலை சீனாவிலும் ஆட்டம் காட்டி வருகிறது.
இரும்புப் பெட்டிகள் (Iron boxes)
இதையடுத்து கொரோனவை ஒழிக்கும் விதமாக, கொரோனா வைரஸ் பாதித்தவர்களை இரும்புப் பெட்டிகளில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரிசையாக இரும்புப் பெட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பூஜ்ஜிய கொரோனா
சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ளது. இதையடுத்து ’பூஜ்ஜிய கொரோனா’ என்ற கொள்கை அடிப்படையில், கொரோனாவை ஒழிக்க லட்சக்கணக்கான மக்களை அந்நாட்டு அரசாங்கம் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.
கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அனைவரும் ஒரு படுக்கை, கழிப்பறை மட்டுமே உள்ள இரும்புப் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் யாராவது ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் கூட அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு இரும்புப் பெட்டிகளில் 2 வாரம் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
20 லட்சம் பேர் (20 lakh people)
20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு வாங்குவதற்குக் கூட வெளியே வர முடியாமல் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது போன்ற அதிரடி முயற்சிகளின் மூலம்தான் கடந்த முறையும் சீனா கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தியதோ? என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
மேலும் படிக்க...
அடுத்து வருகிறது மிக மிக ஆபத்தான வைரஸ்- விஞ்ஞானி எச்சரிக்கை!
நடுங்கும் குளிரில் இருந்து தப்பிக்க- இந்த 4 பொருட்கள் மட்டும் போதும்!
Share your comments