தஞ்சாவூர் மாவட்டத்தில் தெளிப்பு நீர்மற்றும் சொட்டு நீர் பாசனத்துக்கான (Sprinkler and Drip irrigation) மானியம் பெற விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது :
மாவட்டத்தில் தோட்டக்கலை (Horticulture) மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பயிர் பரப்பு விரிவாக்கம் இனத்தில் ரூ.47.30 லட்சம் மற்றும் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனத்துக்கான இனத்தில் ரூ.88 லட்சம், 2020-21ம் நிதியாண்டுக்கு நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பட்டுக் கோட்டை, மதுக்கூர், அம்மாபேட்டை ஆகிய வட்டாரங்களில் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களுக்கு இலக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இந்த மானியங்களைப் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெறுவதற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய கீழ்கண்ட அலுவலர்களின் செல்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
செல்பேசி எண்கள் (Cellphone Numbers)
தஞ்சாவூர் (துணை இயக்குநர் -99653 62562, உதவி இயக்குநர்கள் நடவு பொருள் 94889 45801, தஞ்சாவூர், பூதலூர் - 99434 22198, ஒரத்தநாடு, திருவோணம் -94889 45801, பட்டுக்கோட்டை, மதுக்கூர் 94452 57303, கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் - 72994 02881, பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு - 95266 பேராவூரணி, சேதுபாவாசத்திரம் - 94452 57303
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
மழையால் வெளியேறும் உரஇழப்பைத் தடுக்க - நைட்ரஜன், பொட்டாசியம் இடவேண்டும்!!
வீட்டிலேயே எலுமிச்சை வளர்க்க எளிய டிப்ஸ்!
TNAUவின் புதிய ரகங்கள், ஒட்டுரகங்கள் - காணொளிக் கண்காட்சி மூலம் வணிகமயமாக்கல்!
Share your comments