தமிழகத்தில் கடந்த வருடம் நிவர் மற்றும் புரெவி புயலால் எண்ணற்ற பயிர்கள் சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என் தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது, தோட்டக்கலை பயிர்கள் (Horticulture Crops) பாதிக்கப்பட்ட, 45 ஆயிரம் விவசாயிகளுக்கு, 35 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது.
தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு:
தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகள், கீரைகள், பூக்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி களைகட்டி வந்தது. 2020 டிசம்பரில் உருவான, நிவர் (Nivar) மற்றும் புரெவி புயல்கள் (Burevi Storm) காரணமாக, கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருவண்ணாமலை, வேலுார், மயிலாடுதுறை, பெரம்பலுார், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், 99 ஆயிரம் ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால், விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.
35 கோடி ரூபாய் நிவாரணம்:
வாழை, மரவள்ளி, வெங்காயம், அவரை, கோஸ், புடலங்காய், பாகற்காய், சாமந்தி உள்ளிட்ட பயிர்கள், நீரில் மூழ்கின. இதனால், 45 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 35 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும், அவர்களது வங்கி கணக்குகளில் (Bank Account) நேரடியாக நிவாரண நிதி வரவு வைக்கப்பட்டு உள்ளது. ஆகையால், தோட்டக்கலை துறை விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கூலி ஆட்கள் பற்றாக்குறை! விவசாயிகளுக்கு கைகொடுக்கும் இயந்திரங்கள்!
Share your comments