தமிழர்களின் வரலாற்றிலும், வாழ்வியலிலும் உணவும், மூலிகை மருந்தும் இரண்டர கலந்தது. " உணவே மருந்து! மருந்தே உணவு" என்பதற்கு பண்டைக்கால தமிழ் மருந்துவத்தின் அடிப்படையையும் சான்றாக கூறலாம்.
2022-23ம் நிதியாண்டில் தோட்டக்கலைத்துறை மூலம் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது. இத்திட்டத்தில் அரியலூர் மாவட்டத்திற்கு 300 எண்கள் மூலிகை தோட்டம் அமைக்க ரூ.2.25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், மாவட்டத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
மூலிகை தோட்டம் அமைக்க, 1,500 ரூபாய் மதிப்பில் துளசி, கருவேப்பிலை, கற்றாழை, கற்பூரவள்ளி, புதினா, வல்லாரை, திப்பிலி, பிரண்டை, லெமன்கிராஸ் மற்றும் இன்சுலின் ஆகிய பத்து வகையான மூலிகை செடிகளும், செடிகள் வளர்ப்பதற்கான செடிகள் வளர்ப்பு பைகள் 10 எண்கள் (Grow Bag), 20 கிலோ தென்னை நார் கட்டிகள் (COCO Peat), 4 கிலோ மண் புழு உரம் ஆகியன அடங்கிய தொகுப்பு, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. நபர் ஒருவருக்கு 750 ரூபாய் பயனாளியின் பங்கு தொகையாக வசூலிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளோர் தங்களது (ஆதார் அட்டை நகல் மற்றும் பஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்) ஆவணங்களுடன் www.tnhorticulture.gov.im/kit.new என்ற இணையதளத்தில் பதிவு செய்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் செலுத்திட வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான, மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரமண சரஸ்வதி, அவர்கள் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மூலிகை தோட்டத்தின் பயன்? What are the benefits of herb garden?
மருத்துவ குணமுள்ள மூலிகைகளின் பயன்களை வெளிக்கொணரும்விதமாக, மூலிகைத் தாவரங்களை வீடுதோறும் வளர்க்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
எந்த ஒரு நோயாகட்டும், அதை விரட்டுவதற்கு எடுத்த எடுப்பில் மூலிகைகளை நாடிய மரபு நம்முடையது ஆகும். ஆனால், மரபு சிதைந்து மூலிகைகளின் இடத்தை மாத்திரைகள் பிடித்துவிட்டன. மாத்திரைப் பித்தர்களின் கூட்டமாக மாறிவிட்டது, இன்றையச் சமுதாயம். நமக்கு உண்டாகும் நோய்களுக்கு, மாத்திரைகளை சார்ந்திருப்பதற்கு பதிலாக, மூலிகைகளை சார்ந்திருக்கத் தொடங்கினால், இயற்கை முறையில் நோய்களை வெல்லலாம் என்பதற்கு மாற்று கருத்தே கிடையாது. எனவே, உடனடி மூலிகைகளை, உங்கள் வீட்டில் எளிதாக அரசின் உதவியுடன் அமைத்து பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க:
ஆன்லைனில் மாடித் தோட்டம் கிட் வாங்க அரசு அழைப்பு!
வீட்டுக்குள்ளேயே ஆக்சிஜன் தோட்டம்: கோவை கஸ்தூரி பாட்டி அசத்தல்!
Share your comments