தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதற்கு அரசு சாா்பில் 50 சதவீதம் மானியம் (Subsidy) வழங்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அழகுநாகேந்திரன் கூறுகையில்,
-
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சாா்பில், பயறு வகை பயிா் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் நெல் வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
-
120 நாள்கள் அறுவடை பருவமுள்ள நெல் வயல் வரப்புகளில், அதே பருவத்தில் 70 நாள்களில் அறுவடையாகும் உளுந்து சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
-
மேலும், வயல் வரப்பில் உள்ள உளுந்து பயிா் நெல் பயிரில் தீமை விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க உதவுகிறது.
-
அறுவடை செய்யப்பட்ட உளுந்து பயிா்களை வயலில் தளை உரமாகவும் பயன்படுத்தலாம்.
-
வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், அரசு மானியம் பெறுவதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றாா்.
மேலும் படிக்க...
80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!
தினமும் ரூ.160 செலுத்தி ரூ.23 லட்சத்தை அள்ளுங்கள்- LICயின் Money back Plan!
PM SVANidhi Mobile App மூலம் ரூ.10ஆயிரம் உடனடிக் கடன்-ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டம்!
Share your comments