1. தோட்டக்கலை

8,500 டன் உரங்கள் கையிருப்பு- வேளாண்துறை தகவல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
8,500 tonnes of fertilizer stocks - Agriculture Information!
Credit : IndiaMART

கோவையில் சம்பாப் பருவத்துக்கு தேவையான 8 ஆயிரத்து 50 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி (Cultivation of horticultural crops)

இது தொடா்பாக வேளாண் இணை இயக்குநா் இரா.சித்ராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் நடப்புச் சம்பாப் பருவத்தில் நெல், பயறு வகை பயிா்கள், எண்ணெய் வித்துகள் மற்றும் பல்வேறு வகையான தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்படுகிறது.இந்தப் பருவத்திற்குப் பொதுவாக அக்டோபா் மாத இறுதிக்குள் விதைப்பு பணிகள் நிறைவுபெறும்.

8,500 டன் உரங்கள் இருப்பு (8,500 tons of fertilizer reserve)

இந்நிலையில் நடப்பு பருவத்துக்குத் தேவையான ரசாயன உரங்களான யூரியா - 1,150 டன், டி.ஏ.பி. - 960 டன், காம்ப்ளக்ஸ் - 2,890 டன், பொட்டாஷ் - 2,200 டன், சூப்பா் பாஸ்பேட் - 1,300 டன் என மொத்தம் 8 ஆயிரத்து 500 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, திரவ பொட்டாஷ் போன்ற அங்கக உரங்களும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த உரங்கள் அனைத்தும் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, திரவ பொட்டாஷ் போன்ற அங்கக உரங்களும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த உரங்கள் அனைத்தும் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

உரத்தட்டுப்பாடு கிடையாது

இதனை வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். இத்துடன் விவசாயிகள் வயலில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ற வகையில் உரமிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே செயற்கையாக உரத்தட்டுப்பாட்டை உருவாக்க முயன்றால், அந்த உர நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

சம்பா பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: 8,500 tonnes of fertilizer stocks - Agriculture Information! Published on: 22 October 2021, 10:30 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.