கோவையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், மானிய விலையில் 8 வகையான காய்கறி விதைகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.
பயிர்கள் சாகுபடி (Cultivation of crops)
தமிழகத்தில் வேளாண், தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம், மாநிலத்தின் பல மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட கிராமங்களைத் தோ்வு செய்து வேளாண், தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி, தேனீ, கால்நடை வளா்ப்பு, கலப்பின பயிா்கள் சாகுபடி ஆகியவற்றைச் செய்யுமாறு விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
வளா்ச்சிப் பணிகள்
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 83 வருவாய் கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விதைப் பாக்கெட்டுகள் (Seed packets)
இதனைத் தொடா்ந்து இந்தக் கிராமங்களில் தலா 100 விவசாயிகளுக்கு 8 வகையான விதைப் பாக்கெட்டுகள், மண்புழு உரம் ஆகியவை மானியத்தில் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாகத் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி கூறியதாவது: காய்கறி சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் கத்தரி, மிளகாய், தக்காளி, வெங்காயம் உள்பட 8 வகையான விதை பாக்கெட்டுகள், 2 கிலோ மண் புழு உரம் ஆகியவை வழங்கப்படுகிறது.
ரூ.35க்கு (For Rs.35)
1 பாக்கெட் ரூ.5 வீதம் 8 பாக்கெட்டுகள் சோ்த்து ரூ. 40க்கு வழங்கப்படுகிறது. அதேபோல மண்புழு உரம் கிலோ ரூ.10க்கு வழங்கப்படுகிறது. 8 வகையான விதைபாக்கெட்டுகளின் மொத்த விலை ரூ.60 ஆகும். இதனை மானிய திட்டத்தின் கீழ் ரூ.35க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க...
ஒரு ரூபாய்க்கு தோசை - சாப்பிடக் குவிந்த மக்கள்!
பட்டாசுக்கு பலியான தந்தை- மகன்- இருசக்கர வாகனத்தில் விபத்து!
Share your comments