1. தோட்டக்கலை

கரும்பு சாகுபடியில் 50 சதவீத செலவைக் குறைக்க வேண்டுமா? - விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
A way to reduce the cost of sugarcane cultivation by 50 percent - a tool to help cut the mother seed!

கரும்பு சாகுபடிக்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தைக் குறைக்க ஏதுவாக தாய்குருத்தை வெட்ட உதவும் கருவியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) உருவாக்கியுள்ளது.

கரும்பு சாகுபடியில் நீடித்த நிலையான சுரும்பு சாகுபடி தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இச்சாகுபடியில் கரும்பு நாற்று நடவு செய்த 30ம் நாள், தாய்ருருத்தை 25 mm (1 Inch) மேல் வெட்டிவிட வேண்டும். இதற்கு விவசாயிகள் கத்தரிகோல், கத்தி மற்றும் அறிவாள்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

குனிந்தவாறு இக்கருவிகளை பயப்படுத்துவதுவதால், முதுகுவலி ஏற்படுவது மட்டுமல்லாமல், கருவிகளின் கூர்முனையால் கைகள் மற்றும் கரும்பு தோகையில் கூர்முனை பகுதியால் கண்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் குறைந்த எண்ணிக்கையிலான கரும்பு தாய்குருத்தை வெட்டுவதற்கே அதிக நேரமும் செலவிட வேண்டியுள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பண்ணையின் இயந்திரவியல் மற்றும் சக்தி துறையில், கரும்பு தாய்குருத்தை வெட்டும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பண்ணை இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் - நா. காமராஜ் மற்றும் பேராசிரியர் அ. தாஜூதீன் ஆகியோரால், உருவாக்கப்பட்டு, காப்புரிமைக்கான விண்ணப்பம் 2013ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இந்தியாவின் அறிவுசார் சொத்து அலுவலகம் இக்கருவிக்கான காப்புரிமையை 20 ஆண்டுகளுக்கு (2015-33) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளது.

சிறப்புஅம்சங்கள் (Features)

  • இக்கருவி, பிரதான குழாய் கத்தரிகோல், இயக்க கம்பி மற்றும் கைப்பிடி போன்ற பாகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • இதன் எடை ஒரு கிலோவிற்கும் குறைவாக இருப்பதால், பெண்களும் மிக எளிதாகப் பயன்படுத்த வெட்ட முடியும்.

  • இதன்மூலம் விளைகின்ற கரும்புகள் ஒரே சீராக இருப்பதுடன், பருமனான கரும்புகளை அதிக எண்ணிக்கையிலும் பெற முடியும்.

  • ஒரு மணி நேரத்தில் 800க்கும் மேற்பட்ட கரும்பு தாய்குருத்துக்களை வெட்டலாம்.

  • இக்கருவியைப் பயன்படுத்துவதால் 50 சதவிகிதத்திற்கு மேல் நேரம் மற்றும் செலவை குறைக்க முடியும்.

மேலும் படிக்க...

புரெவி புயல் வலுவிழந்தது- தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வருமானம் -பளிச் லாபம் தரும் பட்டு வளர்ப்புத்தொழில்!

TNAUவில் டிச.5ம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சி!

English Summary: A way to reduce the cost of sugarcane cultivation by 50 percent - a tool to help cut the mother seed! Published on: 04 December 2020, 10:23 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.