நெல் அறுவடை செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கடலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு, தனியார் இயந்திர உரிமையாளர்கள்,அமைப்பினர் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வந்துள்ளன.
ஆலோசனைக் கூட்டம் (Consultative meeting)
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி தலைமையில் நடைபெற்றது.
விவசாயிகள், தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் வேளாண் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாடகை நிர்ணயம் (Rent determination)
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், பெல்ட் டைப் (Belt Type) தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக ரூ.1800 முதல் ரூ.2.100 வரையும், டயர் டைப் (Tyre Type)இயந்திரங்களுக்கு ரூ.1,300 முதல் ரூ.1,500 வரையும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.
தற்போது பெரும்பாலான பகுதிகளில் அறுவடை நடைபெற்று வருவதால், அரசு நிர்ணயித்த வாடகைக்கு மிகாமல் விவசாயி களிடமிருந்து வசூலிக்கப்படுவதை கண்காணிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க...
மா மரங்களைத் தாக்கும் கற்றாழைப்பூச்சி- பாதுகாக்க யோசனை!
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!
Share your comments