ஆமணக்கு பயிரிட்டு, பிரதான பயிரில், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முயற்சியில் உடுமலை விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில், காய்கறி மக்காச்சோளம், பருத்தி உட்பட சாகுபடிகள் மேற்கொள்ளப்படு கின்றன.அனைத்து வகை சாகுபடியிலும், பூச்சிகள் தாக்குதலால் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்காக, பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவு பயன்படுத்தாமல் கட்டுப்படுத்த, வேளாண்துறை, தோட்டக் கலைத்துறை சார்பில், பல்வேறு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
அவ்வகையில், வரப்பு பயிர் பிரதானமாக பரிந்துரைக்கப்படுகிறது. இது குறித்து வேளாண் துறையினர் தெரிவித்திருப்பதாவது :
-
அனைத்து சாகுபடிகளிலும், பொடு பயிர், வரப்பு பயிர், வேலிப் பயிர் பொறி பயிர் என, சில தாவரங்களை கட்டாயம், பயிர் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
-
கவர்ச்சிப் பயிராக ஆமணக்கு செடிகளை பராமரித்தால், அச்செடிகளின், அகன்ற இலைப்பரப்பில், புரூட் போனியா, பச்சைக்காய் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், அவனி வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகள் ஆகியவை ஈர்க்கப்படும்.
-
பின்னர் அதிகம் தாக்கப்பட்ட, ஆமணக்கு இலைகளை, தனியாக பிரித்து முட்டை குவியல்களை எளிதாக அழிக்கலாம்.
-
இதனால், பிரதான பயிரில், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் தவிர்க்கப்படுவதுடன் நோய்த்தடுப்பு பணியும் எளிதாகும்.
-
ஆமணக்கு, பூசணி வித்துகளை காற்றின் மூலம் பரவவிடாமல், தடுத்து பயிருக்கு பாதிப்பு களை தவிர்ப்பது, இதன் விதைகளிலிருந்து பெறப்படும்.
-
ஆமணக்கு எண்ணைக்கு சந்தை வாய்ப்புகளும் உள்ளன.
-
நடப்பு சீசனில், மக்காச்சோளவிளை நிலங்களில் வரப்பு பயிராக பரவலாக ஆமணக்கு செடிகள் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு தோட்டக் கலைத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
வெட்டுக்கிளித் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவது எப்படி?
Share your comments