1. தோட்டக்கலை

நீங்கள் விவசாயியா? உங்களுக்கு அனைத்தும் 50% மானியத்தில் விநியோகம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit : Netmeds

தஞ்சையில் 50 சதவீத மானிய விலையில் உளுந்து, பயறு விதைகள் விநியோகம் செய்யப்படுவதால், விவசாயிகள் வாங்கிப்பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தின் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம், ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து மற்றும் மணிலா விதைப்பு செய்த விளைநிலங்களை வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அவர் பேசியதாவது: வேளாண்துறை சார்பில் சம்பா, தாளடி மற்றும் தரிசு நிலங்களில் உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு விதை உளுந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மானியத்தில் விற்பனை (Sale on subsidy)

இவை  கொள்ளிடம், எருக்கூர், முதலைமேடு, கடவாசல் ஆகிய வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

விதை ரகங்கள் (Seed varieties)

தரிசு நிலங்களில் உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு விதை உளுந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த உளுந்து விதை விநியோகம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், மானாவாரி மேம்பாட்டு திட்டம் மற்றும் நீர் மேலாண்மை திட்டம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆடுதுறை 3 ரகத்தை சேர்ந்த விதை உளுந்து மற்றும் பயறு, ஆடுதுறை-5, வம்பன்-6 ஆகிய ரக விதை உளுந்து வேளாண் துறை சார்பில் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

உயிர் உரம் (Bio-fertilizer)

இதைத்தவிர விதை நேர்த்தி செய்ய உயிர் உரம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, டிவிரிடி ஆகிய இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
50 சதவீத மானியத்தில் தார்பாய் மற்றும் பயிர் நுண்ணூட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
இதை விவசாயிகள் அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்களுக்கு நேரில் சென்று வாங்கி பயன்பெறலாம்.

பிரீமியம் தொகை (Amount of premium)

தற்போது உளுந்து, மணிலா விதைப்பு செய்த அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வரும்15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு ரூ.192.15 வீதமும், மணிலா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.382.50 வீதமும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, இ-சேவை மையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஆகிய ஏதாவது ஒன்றில் பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க...

நீங்க டிகிரி முடிச்ச பெண்ணா? அப்படினா உங்களுக்கு ரூ.50,000!

நெல்லுக்கு எவ்வளவு நீர் தேவை? தெரியுமா உங்களுக்கு!

நாட்டுக் காய்கறி வகைகள் பற்றி தெரியுமா?

English Summary: Are you a farmer? Delivery to all of you at a 50% discount! Published on: 06 February 2021, 10:54 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.