1. தோட்டக்கலை

நாடு முழுவதும் பெருகிவரும் நாற்றுப்பண்ணைகள் மற்றும் மேலாண்மை குறித்த தகவல்கள்

KJ Staff
KJ Staff
nursery preparation

இந்தியாவில் நகர மற்றும் கிராமப்புற பகுதிகள் தோட்டகலைப் பயிர்கள், முக்கியமாக மற்றும் ஆபரணப் பயிர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனுடன், சிறந்த தரமுடைய நடவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததுடன், சமீப காலமாக நாற்றுப்பண்ணைத் தொழிலானது நமது நாட்டில் பெரும் வளர்ச்சியையும் அடைந்துள்ளது. நாற்றுப்பண்ணையின் செடிகள் பழத்தோட்டங்கள், பெரிய பூங்காக்கள் மற்றும் பூந்தோட்டங்களிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன. உயர்ந்த கட்டிடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வியாபாரஸ்தலங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், கொலலைப்புறங்கள், நகரங்களின் சாலையோரங்கள், மேற்கூரைகள் போன்ற பல இடங்களில் அழுகுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கு விழாக்காலங்கள் மற்றம் கண்காட்சி காலங்களில் பெருமளவு தேவை ஏற்படுகின்றது. அலங்கார செடிகளுக்கான நாற்றுப் பண்ணைத் தொழிலானது பெரிய மற்றும் சிறிய நகரங்களில் பொருமளவு நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாற்றுப் பண்ணை அமைத்தல்

நாற்றுப்பண்ணையை படிப்படியாக உருவாக்க வேண்டும். விதையில்லா மற்றும் விதையினால் பயிர்ப்பெருக்கத்திற்காக தாய் செடிகள் மற்றும் பருவகால மலர்ப்பயிர்கள் போன்ற விதையினால் இனப்பெருக்கம் செய்யப்படும் செடிகள் மற்றும் விதைச்செடிகள் போன்றவற்றை அடுத்தடுத்து உற்பத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும். நாற்றுப்பண்ணையை அமைப்பதற்கு வேளாண் - காலநிலைகள் வேண்டும். நாற்றுப்பண்ணையை அமைப்பதற்கு வேளாண் - காலநிலைகள், மண்வகைகள், மண்ணின் கார அமிலத் தன்மை, இருப்பிடம், பரப்பளவு, நீர்ப்பசான வசதிகள், தகவல் பரிமாற்றம், சந்தை தேவை, பண்பகப் பண்ணை அல்லது தாய்ச்செடிகள் கிடைக்கக்கூடிய அளவு, திறமை பெற்ற தொழிலாளி ஆகிய காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

Land Preparation

நாற்றுப்பண்ணை அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுத்தல்

பொருட்களை சிறு அல்லது எவ்வித சேதாரமும் இல்லாமல் போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு விற்பனை செய்யப்படும் மையத்திற்கு அருகிலேயே நாற்றுப்பண்ணைக்கு இடுபொருட்களைக் கொண்டு வருவதற்கும் போதிய போக்குவரத்து வசதியுடன் இருக்க வேண்டும். நாற்றுப்பண்ணைக்குள் ஒரு நிரந்தர பல்லாண்டு நீர் ஆதாரத்திற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். காற்றுத் தடுப்பு வேலி மரங்களான தைல மரம், பெருநெல்லி, விதையிலிருந்து முளைத்த மா ஆகியவற்றை போதுமான நிழல் மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்காக தேவைப்படும் சமயத்தில் நடவு செய்யலாம்.

உற்பத்தி பொருளைத் தேர்ந்தெடுத்தல்

அருகிலிருக்கும் சந்தைகளில் நிலவும் தேவையினைப் பொறுத்தே உற்பத்தி செய்யப்படும் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெருமளவு சந்தையினைக் கவர்வதற்கு சந்தையில் விருப்பமானவற்றில் முதலில் நன்கு கற்றுத் தெரிந்திருக்க வேண்டும். பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் சாலேயோர தோட்டங்கள், அலலுலகங்கள், வியாபார ஸ்தலங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் ஆகிய இடங்களுக்கு பொருத்தமான நிழல் விரும்பம் தழைச்செடிகள், பூச்செடிகள், படர்கொடிகள் ஆகிய பல்வேறு வகையான அழகுச் செடிகளை நாற்றுப்பண்ணையில் பயிர் பெருக்கம் செய்யலாம். மலர்கள், குமிழ்கள், கிழங்குகள் போன்றவற்றிலிருந்தும் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம்.

Plants Propogation

பயிர்ப்பெருக்க முறைகள்

விதை அல்லது விதையில்லா பயிர்பெருக்கம் மூலம் செடிகளை உற்பத்தி செய்யலாம். சில முக்கியமாக பயிர்பெருக்க முறைகள் பழப்பயிர்களின் எடுத்துக்காட்டுடன் கீழே விளக்கப்பட்டுள்ளன.

விதைநாற்றுக்கள்

தகுந்த நிலையில் விதைக்கப்பட்டிருந்தாலும் விதைகளின் முளைப்பத்திறன் நூறு சதவிகதமாக இருக்காது. விதையின் வயது, முதிர்ச்சி பருவம் மற்றும் முளைத்திறன், நீர், உயிரிய அளிப்பு மற்றும் வெப்பம் அல்லது வெப்பநிலை ஆகியவை விதையின் முளைப்புதிறனைக் கட்டுப்படுத்துகின்றன. சில விதைகள் எளிதாக முளைக்காததற்கு அவற்றின் உறக்கநிலை, ஒய்வுக்காலம் மற்றும் கடினமான மேல்தோல் ஆகியவையே காரணிகளாகக் கருதப்படுகின்றன. விதைகளை தேய்த்தல், நீரில் ஊற வைத்தல் அல்லது அமில நேர்த்தி செய்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பின்படுத்தி விதையின் மேல தோலினை உடைக்கலாம்.

விதையின் முளைத்திறனை பரிசோதித்த பின்னரே விதைத்த பெருமளவில் மேற்கொள்ளவேண்டும். எ.கா.எழுமிச்சை, பெருநெல் மாண்டரின், ஆரஞ்சு, சீதாப்பழம், துரியன், லிட்சி, மங்குஸ்தான், மேற்கிந்திய செர்ரி, தாட்பூட் பழம், பிளிம்பி கெரம்போலா கரோனடா, சோக்வர், ஃபால்சா போன்றவை.

விதையில்லா பயிர் பெருக்கம்

அழகுச் செடிகளைப் பயிர் பெருக்கம் செய்வதற்கு தண்டுத் துண்டு, பதியம் உருவாக்குதல், பாகம் பிரிப்ப மொட்டுக்கட்டுதல் மற்றும் ஒட்டுக்கட்டுதல் போன்ற முறைகளை கையாளலாம்.

Layering the stem

தண்டுத்துண்டு

தண்டுகள், வேர்கள், இலைகள் மற்றும் கிழங்குகள், தண்டடிக்கிழங்கு, வேர்கிழங்குகள், ஒரு தண்டுகள் மற்றும் குமிழ்கள் போன்ற திருந்திய தண்டகள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இம்முறை எளிதாகவும் சிக்கனமாகவும் மேற்கொள்ளப்படுவதால், இது பெரிதும் பிரபலமடைந்தள்ளது. இருப்பினம் ஒராண்டு, ஈராண்டு மற்றும் சில பல அண்டு பயிர்களில், விதைத்தல் பதியம் போடுதல் மற்றும் ஒட்டுக்கட்டுதல் ஆகிய முறைகளே எளிதாகவும் பணச்சிக்கனத்துடனம் மேற்கொள்ளப்படுகின்றன. எ. கா: திராட்சை, மாதுளை, பேரி. மேற்கிந்திய செர்ரி. தாட்பூட் பழம். லோக்வட். ஃபாள்ஸா, அத்தி, கிவி கறிப்பலர போன்றவை பயிர்கள்.

பதியம் போடுதல்

செடியிலிருக்கும் தண்டுகளில் வேர்களை உருவாகச் செய்த பின்னர் வேர்களுடன் உள்ள அத்தண்டினைப் பிரித்தெடுத்து இன்னொர செடியாக நடவுசெய்வதே பதியம் போடுதலாகும்.  பெரும்பாலும் படர்செடிகளும் மரங்களும் இம்முறையில் பயிர்பெருக்கம் செய்யப்படுகின்றன. கார்னேசன், செவ்வந்தி போன்ற இளந்தண்டு செடிகள் பதியம் போடுதல் முறையின் மூலம் பயிர்பெருக்கம் செய்யப்படுகின்றன. எ. கா: கொய்யா, மாதுளை, எழுமிச்சை. மேற்கிந்திய செர்ரி, லிட்ச்சி, கரோன்டா, ஃபாள்ஸா, ரம்பூட்டான், கறிப்பலா போன்ற பயிர்கள்.

பாகமிடுதல் மற்றும் பிரித்தெடுத்தல்

தரைமட்டத்தில் பெருமளவு தண்டுகளை உற்பத்தி செய்யும் செடிகளிலிருந்து ஒவ்வொரு தண்டும் அதன் வேர்களுடன் தனித்தனி செடிகளாக பிரிக்கப்படுவதே பாகமிடுதளலாகும். பிரித்தெடுத்துக் முறையில் வேர்விட்ட அல்லது வேரில்லாத பாகங்கள் முதிர்வடையும்போது தானாக பிரிந்து அடத்து வரும் பருவத்தில் ஒரு புது செடியாக வளர ஆரம்பித்துவிடும். செவ்வந்தி, சம்பங்கி, ரஸ்ஸேலியா மற்றும் பெரும்பாலான இளந்தண்டு பல அண்ட பயிர்கள் பாகமிடுதல் அறையில் சுலபமாக பயிர்பெருக்கம் செய்யப்படுகின்றன. குமிழ் நீர்ப்பூங்கோரை மற்றும் குங்குமப்பூ போன்ற பயிர்கள் பிரித்தெடுத்தல் முறையில் பயிர்பெருக்கம் செய்யப்படுகின்றன.

தாவரக்கன்று, வேர்க்கிழங்குகள், கிழங்குகள், ஒடுதண்டுகள், மகிழ்ப்புத்தண்டுகள். குமிழ்கள், தண்டடிக்கிழங்குகள். சிறுகுமிழ்த்தண்டுகள் போன்ற செடியின் பிற பாகங்களும் விதையில்லா பயிர் பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. எ. கா வாழை (கன்றுகள்), அன்னாசி கன்றுகள் மற்றும் வேர்க்கட்டைகள்), ஸ்ட்ராபெர்ரி (ஒடுதண்டுகள், வேர்க்கட்டைகள்) போன்ற செடிகள்.

Joining the plant

ஒட்டுக்கட்டுதல்

ஒட்டுக்கட்டுதல் முறையில் அழகுச் செடிகளில் ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலும் இனப்பெருக்கம் செய்யப்படுவதில்லை. அவ்வாறு மேற்கொள்ளப்பட்டால் உள்வளைவு ஒட்டு, பக்க ஒட்டு, சரிவு ஒட்டு, ஆப்பு ஒட்டு. தட்டை ஒட்டு மற்றும் இரக்கை ஒட்டு ஆகிய முறைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் சில பகுதிகளில் ரோஜாவில் பயிர்ப்பெருக்கத்திற்கு உள்வளைவு ஒட்டு முறை மேற்கொள்ளப்படுகின்றது. பக்க ஒட்டு முறையானது ரோஜா மற்றும் கெமீலியாகளில் பின்பற்றப்படுகின்றது. எ.கா: பெருநெல்லி, மா, சப்போட்டா, பலா, துரியன், ஆப்பிள், பேரி, வெண்ணெய் பழம், மேற்கிந்திய செர்ரி, சீதாப்பழம், ரம்பூட்டான், பெரிசிமன், ஆப்ரிகாட், லோக்வட் போன்ற பயிர்கள்

மொட்டு கட்டுதல்

அழகுச் செடிகளில் ‘T’ வடிவ மொட்டு அல்லது ‘கேடய’ மொட்டு முறையெ பயிர்ப்பெருக்கத்திற்கு பயன்படுகின்றது. எ-கா: பெருநெல்லி, இலந்தை, ஆரஞ்சு, சாத்துக்குடி, பீச், ப்ளம். வெண்ணெய் பழம், லிட்ச்சி. லோக்வட்,. ஆப்ரிகாட் போன்ற பயிர்கள்.

திசு வளர்ப்பு

வளர்நுனி வளர்ப்பு முறையில் ஆர்கிட் பயிர்களில் முதன் முதலில் வணீகரீதியில் வெற்றிகரமாக திசுவளர்ப்பு பயிர்பெருக்க முறை மேற்கொள்ளப்பட்டது. இளந்திசுக்களை உடைய அழகுச் செடிகளில் திசு வளர்ப்பு முறை வெற்றிகரமாகக் மேற்கொள்ளப்படுகின்றது. பெருமளவு அழகுச் செடிகள் திசு வளர்ப்பபு முறைக்கு ஏற்றதாகத் திகழ்கின்றன. க்ளாடியோலஸ், கார்னெசன், லில்லி, ரோஜா, ஸெர்பிரா, ஆந்தூரியம். மேக்னோ லியா. பெரணி. கள்ளிச்செடி வகைகள் போன்றவை இதற்கு சில எடுத்துக்காட்டுகளாகும். இம்முறையில் பயிர்பெருக்கம் மேற்கொள்ளப்படுவது மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றது. எ.கா :வாழை

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Are You looking for a Profitable business in Horticulture? Plant propagation is the best choice

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.