1. தோட்டக்கலை

பயிர்களின் Big Boss-ஸாகத் திகழும் அசோபாஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Azophos, the Big Boss of Crops!

அசோபாஸ் எனப்படும் திரவ உயிர் உரம், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை அள்ளித்தந்து, விவசாயிகளுக்குக் கிடைத்த வரமாகத் திகழ்கிறது.

இயற்கையாகவே மண்ணில் நன்மை பல செய்யும் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. தாவரங்களின் வேர் அருகில் வளரும் இந்த நுண்ணுயிர்கள், மண்ணில் இயற்கையாகவே உள்ள சத்துக்களை தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாற்றித் தருகின்றன.

இது போன்ற நுண்ணுயிர்களை பிரித்தெடுத்து, ஆய்வகங்களில் வளர்த்து உயிர் உரங்கள் என்ற பெயரில் சில நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. இவை காற்றில் உள்ள தழைச்சத்தை (நைட்ரஜன்) கிரகித்து மண்ணில் நிலை நிறுத்துகின்றன.

சில நுண்ணுயிர்கள் மண்ணில் நாம் கொடுக்கும் மணிச்சத்து மற்றும் பொட்டாஷ்யச் சத்துக்களை பயிர் எடுத்துக் கொள்ளும் வகையில் மாற்றி தருகின்றன.

இதன் அடிப்படையில் அசோபாஸ் என்னும் திரவ உயிர் உரம், தழை மற்றும் மணிச் சத்தினை கொடுக்க கூடிய வகையில் தயாரிக்கப்படுகிறது. இதனைக் பயன்படுத்துவதன் மூலம்  20 சதவீதம் இரசாயன உரம் பயன்படுத்துவதை நாம் குறைத்துக்கொள்ள முடியும்.

இந்த உயிர் உரம் அனைத்து வேளாண் அலுவலகங்களிலும் கிடைக்கிறது. இதனை விவசாயிகள் வாங்கி பயன் பெறலாம்

உபயோகிக்கும் அளவு

விதை நேர்த்திக்கு ஒரு ஏக்கருக்கு 50 மில்லி லிட்டர், நாற்று நனைத்து நடுவதற்கு ஒரு ஏக்கருக்கு 150 மில்லி லிட்டர், மண்ணில் இடுவதற்கு ஒரு ஏக்கருக்கு 200 மில்லி லிட்டர் தேவைப்படும்.

இத்தகவலை, செங்கல்பட்டு, உயிர் உர உற்பத்தி மைய மூத்த வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க....

நிறைந்த லாபம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு - மானியம் பெறஉடனே விண்ணப்பியுங்கள்!

அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் மெத்தனம் - பட்டுக்கூடு உற்பத்தியாளா்கள் கவலை!

இந்த 10 ரூபாய் இருந்தால், அடிக்கப்போகிறது யோகம்- கொட்டப்போகிறது பணம்!

English Summary: Azophos, the Big Boss of Crops! Published on: 14 November 2020, 01:56 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub