1. தோட்டக்கலை

பெல்லாரி வெங்காயம் சாகுபடி

KJ Staff
KJ Staff

பெல்லாரி வெங்காயம் சாகுபடி

இரகங்கள்: பெல்லாரி சிகப்பு, பூசா சிவப்பு, என்பி 53, அர்கா நிகேதன், அர்கா கல்யாண், அர்கா பிரகதி, அக்ரி பவுண்ஃட் வெளிர் சிகப்பு, அக்ரி பவுண்ஃப் அடர் மற்றும் அர்கா பிந்து.

மண் மற்றும் தட்பவெப்பநிலை: மணல் கலந்த அல்லது வண்டல் மண் கலந்த இருமண் பாட்டு நிலத்தில் நன்கு வளரும். அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் இல்லாத மிதமான தட்பவெப்பநிலை மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.8-6.5 இருத்தல் வேண்டும்.

பருவம்: மே - ஜூன்

விதையும் விதைப்பும்

விதைஅளவு: எக்டருக்கு 10 கிலோ விதைகள். விதைகளை விதைப்பதற்கு முன்பு 1 கிலோ விதைக்கு 100 கிராம் அசோஸ்பைரில்லாம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து, நிழலில் 30 நிமிடம் உலரவைத்து பின்பு விதைக்க வேண்டும்.

நாற்றங்கால் தயாரித்தல்: ஒரு எக்டர் நடவு செய்ய சுமார் 5 சென்ட் நாற்றங்கால் தேவை. நிலத்தை நன்கு கொத்தி, 1 சதுர மீட்டருக்கு 1 கிலோ என்ற அளவில் விஏஎம் என்ற நன்மை செய்யும் பூசணக் கலவையை இடவேண்டும். நாற்றங்காலுக்கு சென்டிற்கு ஒரு கிலோ என்ற அளவில் டிஏபி இட்டால் நல்ல நாற்றுக்கள் கிடைக்கும். நாற்றங்காலில் விதைகளை அடர்த்தியாக விதைக்காமல், பரவலாக விதைக்க வேண்டும். அப்போது தான் நாற்றுக்கள் செழுமையாக வளர்ந்து 40-45 நாட்களிலிலேயே நடவிற்கு தயாராகிவிடும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை ஒன்று அல்லது இரண்டு முறை உழவு செய்யவேண்டும். அதிகமாக உழவு செய்தால் வெங்காயம் மண்ணினுள் இறங்கிவிடும்.

 

ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை

கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழுஉரம், 50 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றை இட்டுக்கலந்து விடவேண்டும். பின்பு தேவையான அளவில் பாத்திகள் அமைத்திட வேண்டும். நடவு செய்யும் முன்னர் ஒரு எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து 150 கிலோ சாம்பல் சத்து, 75 கிலோ கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.

மேலுரமிடுதல் : நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக தழைச்சத்து 60 கிலோ கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.

உரப்பாசனம்
ஊட்டச்சத்தின் அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 60:60:30 கி.கி. ஆகும். இதில் 75% மணிச்சத்தை (45 கி.கி. மணிச்சத்து 281 கி.கி. சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடியுரமாக அளிக்க வேண்டும். மீதமுள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 60:15:30 கி.கி.  உரப்பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். அளவைப் பிரித்து பயிரின் ஆயுட்காலம் முழுவதும் 3 நாட்களுக்கு ஒரு முறை உரப்பாசனமாக அளிக்க வேண்டும்.  மொத்தம் தேவைப்படும் அளவு ஒரு எக்டருக்கு 19:19:19 க்கு 32 கி.கி, 12:61:0 க்கு 15 கி.கி, 13:0:45க்கு 14 கி.கி, 0:0:50க்கு 36 கி.கி மற்றும் யூரியா 111 கி.கி.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் ஒரு தண்ணீரும், பின்னர் மூன்றாம் நாள் உயிர் தண்ணீரும்  பாய்ச்ச வேண்டும். அறுவடை வரை 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை அல்லது தேவைப்படும் போது நீர் பாய்ச்ச வேண்டும்.

 

களைக் கட்டுப்பாடு

தேவைப்படும் போது களை எடுக்கவேண்டும்.

 

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

இலைப்பேன், வெங்காய ஈ, வெட்டுப்புழு போன்றவை வெங்காயத்தை சேதப்படுத்தும் பூச்சிகளாகும்.

 

அறுவடை

அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு நீர் பாசனத்தை நிறுத்திவிட வேண்டும். சுமார் 75 சதம் தாள்கள் காய்ந்து படிந்தவுடன் அறுவடை செய்யவேண்டும். வெங்காயம் நன்றாக முதிர்ந்தபின் அறுவடை செய்யவேண்டும். வெங்காயத்தை நன்றாக காய வைத்துப் பிறகு சேமிக்க வேண்டும்.

மகசூல்: எக்டருக்கு 140-150 நாட்களில் 15 முதல் 18 டன்கள் அறுவடை செய்யலாம்.

English Summary: Bellary Onion production technology

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.