பொள்ளாச்சி, நெகமம் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் கொப்பரை உற்பத்தி களங்கங்களை திருப்பூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொருத்தவரை பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம் மற்றும் கிணத்துக்கடவு பகுகளில்தான் தென்னை சாகுபடி அதிகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி களங்கள் செயல்படுகின்றன.
இதனால், உள்ளூர் மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் பலர் இங்கு தேங்காய் உடைத்தல், உரித்தல், கொப்பரை உலர வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்பட்ட கொப்பரையை திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளகோவில் மற்றும் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் செயல்படும் ஆயில் மில்களுக்கும் (OIl Mills), கொப்பரை கொள்முதல் மையங்களிலும் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
மழையால் பாதிப்பு
இந்நிலையில், தென்மேற்கு பருவமழையால் பொள்ளாச்சி, நெகமம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கொப்பரை உற்பத்தி மற்றும் உலர வைக்கும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சி, நெகமம் பகுதியில் செயல்பட்ட, கொப்பரை உற்பத்தி களங்கள் காங்கேயம், வெள்ளகோவில் மற்றும் ஊத்துக்குளி பகுதிகளுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், சுமார் 3,500க்கும் மேற்பட்ட கொப்பரை களங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் கொப்பரை களங்கங்ள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன.
திருப்பூருக்கு மாற்றம்
தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கோவை மாவட்ட கொப்பைரை உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, திண்டுக்கல், தேனி மற்றும் கம்பம் பகுதி உற்பத்தியாளர்களும் திருப்பூர் மாவட்ட தேங்காய் உடைப்பு மற்றும் கொப்பரை கொள்முதல் மையத்திற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். இதைத்தொடர்ந்து, தென்மேற்கு பருவமழை சீசன் நிறைவடையும் வரை, காங்கேயம் சுற்று வட்டாரப்பகுதியிலுள்ள உலர் களங்கள் கொப்பரை களங்களாக மாறி வருகிறது.
மேலும் படிக்க...
Lockdown : வீட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!
கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!
PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள், இல்லையெனில் ரூ.10,000 அபராதம்!
Share your comments