
இலைக்கருகல் நோயில் இருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்க, நோய் முற்றிய அடிமட்டை இலைகளை வெட்டிவிடுமாறு வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இலைக்கருகல் நோய் (Coconut leaf Blight)
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னைகளில் தற்போது இலை கருகல் நோய் (Coconut leaf Blight) ஏற்பட்டு வருகிறது. இதனால் தென்னையை வெட்டி அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்துள்ள நிலையில், குறிப்பாக பல கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டு ஏற்கனவே நோய் தாக்கப்பட்ட தென்னை மரத்தின் அருகே அமைக்கப்பட்ட தென்னங்கன்றுகளிலும் இலை கருகல் நோய் பரவி வருகிறது.இந்நிலை நீடித்தால் இந்த ஆண்டும் தென்னைகளை வெட்டி அப்புறப்படுத்தப்படுத்தும் நிலை சூழ்நிலை உருவாகும்.
இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் உள்ள தென்னைகளில் ஈரப்பதம் குறைவால், தென்னைகளில் இலை கருகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதில் பூஞ்சான நோய் தாக்கப்பட்ட மரத்தின் மட்டையிலிருந்து, காற்றின் மூலம் மற்ற மட்டைகளுக்கு எளிதாக பரவுகிறது.
இதனை தடுக்க, தென்னை மரங்களில் நோய் முற்றிய அடிமட்டை இலைகளை வெட்டிவிட வேண்டும். இதைத்தவிர தென்னை கருகல்நோய் தாக்குதலை தடுக்க விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் முறையான ஆலோசனை பெற்று பயன்பெற வேண்டும் என்றனர்.
மேலும் படிக்க ....
பண்ணைக் குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
இயற்கை சாகுபடிக்கு ஊக்கத்தொகை- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments