பந்தல் காய்கறி சாகுபடியில், புடலை பயிரிட்டு, முறையாகப் பராமரித்தால் நல்ல வருவாய் ஈட்டலாம் என, தோட்டக்கலைத்துறை யோசனைத் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கோடை காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை காலம் துவங்கியதும், விவசாயிகள் காய்கறி சாகுபடியில் அதிகளவில் ஈடுபடுவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக சமீப ஆண்டுகளில்,பந்தல் முறை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சாகுபடிக்கான வழிமுறைகள் (Methods of cultivation)
-
சாகுபடிக்கு முன்பு, விளை நிலத்தை மூன்று முறை உழவு செய்ய வேண்டும்.
-
கடைசி உழவின்போது, 20 டன் மக்கிய தொழு உரத்தை இட வேண்டும்.
-
விதைப்பு குழிகளில் தொழு உரத்துடன், மேல் மண் கலந்து நிரப்ப வேண்டும்.
-
ஒரு எக்டருக்கு, 1.5 - 2 கிலோ விதை தேவைப்படும்.
-
விதைகளை உயிர் உரங்களில் விதை நேர்த்தி செய்து விதைப்பது முக்கியம்.
-
ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும்.
-
விதை நட்ட எட்டு முதல் 10 நாட்களில் முளைக்கத் தொடங்கிவிடும். சொட்டுநீர் பாசனம் அமைப்பது நல்லது.
-
உர மேலாண்மையில், ஒரு எக்டருக்கு அடியுர மாக, 20-30 கிலோ தழைச்சத்து, 30-50 கிலோ மணிச்சத்து, 30 40 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.
-
மேல்உரமாக, 20 - 30 கிலோ தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.
-
70வது நாளில் குழிக்கு, மக்கிய தொழு உரம் ஒரு கிலோ இட்டால், மண் புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
-
விளக்கு பொறி மூலம் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
நோய்த் தாக்குதல் (Disease attack)
பூச்சி, நோய் தாக்குதல் அதிகமிருந்தால், தோட்டக்கலைத் துறையின் ஆலோசனை பெற்று இயற்கை மருந்துகள் பயன்படுத்த வேண்டும்.
தகவல்
பிரபு
உதவி தோட்டக்கலைத் துறை அலுவலர்
கோவை
மேலும் படிக்க....
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.41¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்!
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி!
Share your comments