திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பகுதி விவசாயிகள் தற்போது முட்டைகோஸ் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குளிர்ந்த வானிலை (Cold weather)
மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய உடுமலைப் பகுதி கிராமங்களில் நிலவும், குளிர்ந்த வானிலை முட்டைகோஸ் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. இதன் அடிப்படையில் தற்போது முட்டைகோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
முட்டைக்கோஸின் சிறப்பு (Cabbage specialty)
ஒரு ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்ய 250 கிராம் விதைகள் போதுமானது. நாற்றங்கால் அமைத்து தொழுஉரம், மண்புழு உரம் போன்றவற்றைப் போட்டு விதைப்படுக்கை அமைக்கவேண்டும்.
விதைகள் நடவு (Planting the seeds)
அதில் 10 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைகளை நடவு செய்ய வேண்டும். பின்னர் நாற்றுக்களைப் பிடுங்கித் தயார்படுத்தப்பட்ட நிலத்தில் 40 செ.மீ., இடைவெளியில் நடவு செய்வது அவசியம்.
பாசனம் (Irrigation)
முட்டைகோஸ் பயிரைப் பொறுத்தவரை மண்ணில் தொடர்ந்து ஈரப்பதம் இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும். அதேநேரத்தில் தண்ணீர் தேங்காத அளவுக்கு சிறந்த வடிகால் வசதி இருக்க வேண்டும்.
நோய்த் தாக்குதல் (Disease attack)
பொதுவாக முட்டைகோஸ் பயிரில் வெட்டுப்புழுக்கள் தாக்குதல் இருக்கும். இதுதவிர இலைப் புள்ளி நோய், இலைக்கருகல் நோய், கருப்பு அழுகல் நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படக் கூடும்.
எனவே, அதற்கான மருந்துகள் குறித்து தோட்டக்கலைத் துறையினரின் பரிந்துரை பெற்றுத் தெளிப்பது சிறந்தது.
அறுவடை (Harvest)
முட்டைகோஸை நடவு செய்த 75 நாளில் அறுவடை செய்யத் தொடங்கலாம். சுமார் 120 நாட்கள் வரை 8 முறை அறுவடை செய்யலாம்.
ஏக்கருக்கு 14 டன் வரை (Up to 14 tons per acre)
இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 10 முதல் 14 டன் வரை மகசூல் கிடைக்கும். முட்டைகோஸ் சாகுபடி லாபகரமானதாக உள்ளது. எனவே முட்டைக்கோஸ் சாகுடி மிகவும் சிறந்ததாக இருப்பதாக உடுமலைப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
சமச்சீர் உரப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி!
பயிர்களைப் பாதுகாக்க உயிர்வேலி அமைப்பு முறையை விவசாயிகள் கையாள வேண்டும்! இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பார்ப்பு!
நாட்டுக்கோழி வளர்ப்பில் முட்டையின் சத்துக்களுக்கு தேவையான தீவனங்கள்!
Share your comments