1. தோட்டக்கலை

நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Cumbu CO(H) 10

கம்பு எல்லா மண் வகைகளிலும் நன்கு வளரும் தன்மையுள்ளது. கம்பு சாகுபடி செய்ய சராசரி மழையளவு 400-750 மி.மீ போதுமானதாகும். இது அதிகமான வெப்பத்தை தாங்கி வளக் கூடியது. மிதமான மழையளவு மற்றும் அதிகப்படியான வெப்பநிலை உள்ள பகுதிகளில் நன்கு செழித்து வளரும்.

அமிலத்தன்மை உள்ள நிலங்கள் கம்பு சாகுபடிக்கு ஏற்றது அல்ல. கம்பில் குறைந்த மகசூலே எடுப்பதற்கு சரியான இரகத்தை பயிரிடாமலும், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை உத்திகளை கையாளமல் இருத்தலே காரணமாகும். உயர் மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சிறப்பியல்புகள் மற்றும் அவற்றின் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து தேனி மாவட்ட த்தில் அமைந்துள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களாகிய பொ. மகேஸ்வரன், எம்.அருண்ராஜ், சி.சபரிநாதன், ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ள தகவல்கள் பின்வருமாறு-

கோ எச் 10ம்பு சிறப்பியல்புகள்:

  • வயது: 85-90 நாட்கள்
  • உகந்த பருவம்: இறவையில் ஆடி மற்றும் சித்திரை,மானாவாரி- புரட்டாசி
  • மகசூல்: 3020 கிலோ ஃ ஹெக்டர்- இறவை, 2050 கிலோ ஃ ஹெக்டர்- மானாவாரி
  • நீண்ட கதிர்களை உடையது மேலும் திரட்சியான மணிகளை உடையது.
  • தண்டு துளைப்பான் மற்றும் கேன் ழுகல் நோய்க்கு எதிர்ப்புதன்மை உடையது.
  • அதிக புரச்சத்து (6மூ), மிதமான இரும்பு(59 பிபிஎம்) மற்றும் துத்தநாக சத்து (37 பிபிஎம்) உள்ளது.
  • உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகியது. மேலும் கம்பை உணவாக எடுத்துக் கொள்வதால் இரத்தசோகை, வயிற்றுக் கோளாறுகள், தொற்று அல்லாத நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.

மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள்:

விதை தேர்வு செய்தல்:

  • தேன் ஒழுகல் நோயால் பாதிக்கப்பட்ட விதைகளை நீக்கி நல்ல தரமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும். கீழ்க்கண்ட செய்முறைகளை கையாண்டு தரமான விதைகளை தேர்வு செய்யலாம்.
  • ஒரு கிலோ உப்பை 10 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். உப்பு தண்ணீரில் விதைகளை போட வேண்டும். மிதக்கும் விதைகள் அனைத்தையும் நீக்கவும். ஏனெனில் அவை, தரமற்ற மற்றும் நோய்தாக்குதலுக்குள்ளான விதைகள் ஆகும். பிறகு அடியில் தங்கிய விதைகளை எடுத்து நல்ல தண்ணீரில் 3 அல்லது 4 முறை கழுவி நிழலில் நன்றாக உலர்த்த வேண்டும்.

விதை நேர்த்தி :

தரமான விதைகளை தேர்ந்தெடுத்த பிறகு ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை அஸோஸ்பைரில்லம் 3 பாக்கெட்டுகள் (600 கிராம்), பாஸ்போ பேக்டீரியா 3 பாக்கெட்டுகள் (600 கிராம்) கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நிலத்தை தயார் செய்தல் :

இரும்பு கலப்பை கொண்டு இரண்டு முறையும், நாட்டுக்கலப்பை கொண்டு இரண்டு முறையும் நன்றாக உழ வேண்டும். மேலும் மண்ணை கட்டிகளின்றி உடைக்க வேண்டும். பிறகு 12.5 டன் தொழுஉரம் அல்லது மக்கிய நார் உரம் கடைசி உழவிற்கு முன் இடவேண்டும். நாட்டுக்கலப்பை கொண்டு உரங்களை மண்ணுடன் ஒருங்கிணைக்க வேண்டும். ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு அஸோஸ்பைரில்லம் 10 பாக்கெட்டுகள், பாஸ்போ பேக்டீரியா 10 பாக்கெட்டுகளை 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

விதையை கடினப்படுத்தி விதைத்தல்:

  • மானாவாரி சாகுபடியால் விதையைக் கடினப்படுத்துதல் ஒரு குறைந்த செலவு பிடிக்கும் தொழில்நுட்பமாகும். விதையை விதைப்பதற்கு முன் ஊவைத்து பின்பு விதைகளை உல செய்து சாதாரண ஈரப்பத நிலைக்கு கொண்டு வந்து, விதைப்பது விதையை கடினப்படுத்தும் தொழில்நுட்பமாகும். இவ்வாறு விதையை கடினப்படுத்துவதால் அவற்றின் முளைப்புத்திறன் அதிகரித்து வேர்கள் நன்கு பரவி பயிர்கள் வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கின்றது.
  • கம்பு விதைகளை 2மூ பொட்டாசியம் குளோரைடு அல்லது 3மூ சோடியம் குளோரைடில் 16 மணி நேரம் ஊற வைத்து பின் 5 மணி நேரம் நிழலில் உலர்த்துவதால் விதையின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.

Read also: Kisan Ki Baat - விவசாயிகளுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட ஒன்றிய அமைச்சர்!

  • விதைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீரிய ஓட்டு கம்பு போதுமானதாகும். நல்ல திறன் வாய்ந்த ஆட்களை கொண்டு சீரான இடைவெளியில் விதைக்க வேண்டும்.

கம்பு பெரும்பாலும் மானாவாரி பயிராகவே அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தானியங்கள்- கோழி மற்றும் பறவைகளுக்கு சிறந்த தீவனமாகவும், கம்புத்தட்டை கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் மனிதனின் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்த கம்பு மற்றும் கம்பு சார்ந்த உணவு பதார்த்தங்கள், மிகவும் முக்கியமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

ரூ.13,966 கோடியில் விவசாயிகளுக்காக 7 திட்டங்கள்- அமைச்சரவை ஒப்புதல்!

உயிர் உரங்களை எப்படி சரியாக பயன்படுத்துவது?

English Summary: Cultivation technology of high yielding Cumbu CO H 10 variety Published on: 04 September 2024, 03:42 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.