1. தோட்டக்கலை

டிரக்டர் மூலம் அழிக்கப்படும் வாழைத் தோட்டம் - பயிர்களுக்கு உரமாக்கப் புதிய முயற்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Destruction of banana plantation by tractor - New attempt to fertilize crops!
Credit : Hindu Tamil

புதுச்சேரியில் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழைத் தோட்டங்களைப் பயிர்களுக்கு உரமாக்க ஏதுவாக டிராக்டர் மூலம் அழிக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டனர்.

விவசாயம் (Agriculture)

புதுச்சேரியில் திருக்கனுார், சந்தை புதுக்குப்பம்,சோரப்பட்டு, வில்லியனூர், பாகூர், சுத்துக்கணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் வாழை, கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறி வகைகளைப் பயிரிட்டு வருகின்றனர்.

600 ஏக்கரில் சாகுபடி (Cultivated on 600 acres)

இங்கு, குறிப்பாக வாழை மட்டும் 600 ஏக்கரில் பயிரிட்டுள்ளது. இவ்வாறு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் செல்வது வழக்கம்.

முழு ஊரடங்கு (Full curfew)

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுப் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர ஊரடங்கு (Part-time curfew)

புதுச்சேரியில் பகுதி நேர ஊரடங்கு உள்ளது. புதுச்சேரி விளைபொருட்கள் பெரும்பாலானவை தமிழகத்தை நம்பியே உருவாக்கப்படுகின்றன. இதனால் பூ வியாபாரிகள் தங்கள் பூக்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் செடியைக் காப்பாற்றப் பறித்து கொட்டும் அவலம் நிலவுகிறது.

அறுவடைக்கு தயார் (Ready to harvest)

இதுபோன்ற சூழல் வாழைக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போது கிராமப்புறங்களில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழைக்காய், வாழைத்தார்கள் மற்றும் இலைகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

பெரும் நஷ்டம் (Great loss)

ஆனால், போக்குவரத்து தடையில் தமிழக வியாபாரிகள் யாரும் தோட்டத்திற்கு வராததால், பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாழை தோட்டம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.குச்சிப்பாளையம் உட்பட பல பகுதிகளில் மரத்திலேயே பழங்கள் உள்ளிட்டவை அழுகிப்போயுள்ளன. சில இடங்களில் மா மரங்கள் விழுந்து விட்டன.

இதுபற்றி குச்சிப்பாளையம் விவசாயி சண்முகசுந்தரம் கூறுகையில், மரங்களில் வாழைப்பழங்கள் அழுகிப் போய்விட்டன. ஆட்களை அழைத்து வந்து கூலி தந்து, சந்தைக்கு கொண்டு செல்ல வழியில்லை. பலமரங்களும் விழுந்து விட்டன என்றார். சில இடங்களிலோ பழம், இலை வியாபாரத்துக்கு கொண்டு வந்தாலும் நஷ்டம்தான் அடைய வேண்டிய சூழல் இருப்பதாக குறிப்பிடுகின்றன.

உரமாகும் வாழை (Fertilized banana)

இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மேலும் நஷ்டத்தை அடைய மனமின்றி, பல ஏக்கர் பரப்பில் பயிரிட்ட வாழைத் தோட்டங்களை டிராக்டர் இயந்திரம் மூலம் அழித்து, நிலத்திலேயே உரமாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் நஷ்டத்தைக் குறைக்கும் விதத்தில் சந்தைப்புதுக்குப்பத்தில் விவசாயி சுந்தரமூர்த்தியின் நிலத்தில் மரங்கள் டிராக்டர் மூலம் உரமாக்கப்பட்டன.

விவசாயிகள் கோரிக்கை (Farmers demand)

விவசாயிகள் தரப்பில் கூறுகையில், எல்லைகள் மூடல், பொது போக்குவரத்து இல்லாதது, புதுச்சேரியிலும், தமிழகப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல முடியவில்லை. அரசு எங்களைக் கண்டுகொள்ளவில்லை. இம்முறையாவது அரசு எங்களுக்கு உதவ வேண்டும். மாற்றுப் பயிர் செய்ய மானியம் தரவேண்டும்.

இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க...

அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!

பருவம் தவறிய மழையால் பாதித்தது முந்திரி விவசாயம்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

 

English Summary: Destruction of banana plantation by tractor - New attempt to fertilize crops! Published on: 28 May 2021, 06:52 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.