செங்குத்து தோட்டம் பொதுவாக Vertical farming என ஆங்கிலத்தில் அழைக்கப்படும், நவீன தோட்டக்கலையின் அங்கமாகும். நாளடைவில், இம்முறை தோட்டக்கலையின் வளர்ச்சி, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து இருப்பது குறிப்பிதக்க உண்மையாகும். எனவே, இதை புதிதாக அமைக்க விரும்பும் விவசாயிகள், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் காணலாம்.
செங்குத்து தோட்டக்கலை என்றால் பலர் அறிந்திருப்பீர்கள், இருப்பினும் ஒர் பார்வை:
பயன்கள்
- குறைந்த இடத்தில் காய்கறிகள் மற்றும் அழகு செடிகள் வளர்கலாம்.
- விவசாய இடங்கள் இல்லா பெருநகரங்களில் செங்குத்து தோட்ட அமைப்பின் மூலம் தங்களுக்கு தேவையான காய்கறிகளை நகரவாசிகள் பயிரிடலாம்
- காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது.
- நஞ்சில்லா காய்கறிகளை அறுவடை செய்து மகிழலாம்.
செங்குத்து தோட்டத்திற்கு ஏற்ற காய்கறிகள்
- புதினா
- கொத்தமல்லி
- முள்ளங்கி
- வெங்காயம்
- கீரைகள்
செங்குத்து தோட்டம் அமைக்க அரசின் உதவி என்ன?
50 சதவீத மானியத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெருநகரங்களுக்கு பின்னேற்பு மானியமாக 40 சதுர அடிக்கு (ஒரு சதுர அடிக்கு ரூ.375 வீதம்) ரூ.15,000/- வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
- இத்திட்டத்தில் பயன்பெற http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_newphp என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கவும்.
- செங்குத்து தோட்டம் அமைப்பதற்கான வரையறைகள்
- கட்டமைப்பு- UV கதிர்வீச்சு பாதுகாப்புடன் கூடிய MSபிரேம் அளவு: செங்குத்து தட்டை: அளவு - அகலம் 25 மி.மீ., தடிமன் 3மி.மீ இடைவெளி: 30 செ.மீ, கிடைமட்ட கம்பி: அளவு- விட்டம் 3மி.மீ, இடைவெளி: 15 செ.மீ. தூள் பூசப்பட்ட ஸ்க்ரு அளவு-6 மி.மீ
- பி.வி.சி தொட்டிகள்- தொட்டியின் நீளம் - 30 செ.மீ., அகலம்-15 செ.மீ, தொட்டிகளின் எண்ணிக்கை - 80
- ஜியோ டெக்ஸ்டைல் பேப்ரிக் - 160 GSM நைலான் பின்னப்பட்ட ஜியோடெக்ஸ்டைல் வடித்துணி
- வளர்ப்பு ஊடகம் - மண்ணற்ற ஊடகக் கலவை (80% தேங்காய் நார் கழிவு, 10% செம்மண், 5% மண்புழு உரம், 5% பெரிலைட் (<0.5 மின்கடத்துத்திறன்), தேவையான அளவு இயற்கை உரம் மற்றும் இயற்கை மருந்து)
- விதைகள்/செடிகள் - கீரைகள், கொத்தமல்லி, முள்ளங்கி, வெங்காயம், புதினா போன்றவற்றின் விதைகள் மற்றும் நடவுச்செடிகள்.
- சொட்டு நீர் பாசன - 16மிமீ விட்டம் கொண்ட HDPE குழாய் மற்றும் 8 LPH இன்லைன் அல்லது ஆன்லைன் உமிழ்ப்பான்.
மேலும் படிக்க:
கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் 26 வரை விண்ணப்பிக்கலாம்
Share your comments