மழைக்காலத்தில் பயிர்களில் தோன்றும் பல்வேறு வகையான நோய்களில் இருந்து, அவற்றைப் பாதுகாப்பது விவசாயத்தில் மிக சவாலான பணியாகும்.
நோய்கள் தாக்கும் காலம் (Disease attack period)
மழைக்காலம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மண்ணை நம்பியிருக்கும் பயிருக்கும் நோய்த் தாக்குதல்களைக் கொண்டுவரும். அத்தகைய நோய்களில் இருந்துப் பயிர்களைப் பாதுகாத்து, மகசூல் இழப்பு இல்லாத வகையில் பார்த்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான பணிதான்.
நோய்யும் - தீர்வும் (Disease - the solution)
குறிப்பாகவாடல், வேரமுகல் மற்றும் தண்டமுகல் நோய்க் காரணிகளான பியூசேரியம், ரைசக்டோனியா, ஸ்கிளிரோசியம் ஆகிய பூஞ்சாணங்களைக் கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங் கிணைப்பாளர் முனைவர் மு. ஹேமலதா மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் சீ.கிருஷ்ணகுமார் கேட்டுக் கொண்டனர்.
ரசாயனப் பூச்சிக்கொல்லி (Chemical Insecticide)
-
வேதியியல் முறையில் கார்பன்டசிம் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்கலாம்.
-
மேன்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸி குரோரை 2 சதவீதம் தெளித்து, இலை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.
-
ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 1 லிட்டர் தண்ணீருக்கு 0.5கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுரோரை 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் மருந்தைக் கலந்து தெளிப்பதன் மூலம் பாக்டீரியாவால் தோற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.
-
அவ்வப்போது வயலைப் பார்வையிட்டு, நோயுற்ற நாற்றுக்களைப் பிடுங்கி எரிந்துகூட வேண்டும்.
-
மேலும் அளவான தழைச்சத்து, மணிச்சத்து, மற்றும் அதிகமான சாம்பல்சத்தை அளிப்பதன் மூலம் நோய்த் தாக்கத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
இயற்கை விவசாயம் (organic farming)
உயிரியல் முறையில் பருத்தி, பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் பழப்பபயிர்கள். ஆகியவற்றில் நோய்களை கட்டுப்படுத்த உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ விதை அல்லது பேசில்லஸ் 10 கிராம் 1 கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். அவ்வாறு விதை நேர்த்தி செய்து விதைக்கும்போது விதைமூலம் பரவும் அனைத்து நோய்களும் கட்டு ப்படுத்தப்படுகின்றன.
மண்ணில் எக்டருக்கு 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி அல்லது பேசில்லஸ்னை 50 கிலோ மக்கிய உரத்துடன் கலந்து 10-15 நாட்கள் நிழலில் வைத்திருந்து இடுவதின் மூலம் வேர அழுகலையும், வாடல் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.
வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ தெளிப்பதன் மூலமும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
மேலும் படிக்க...
வெளிநாட்டில் வெங்காயப் பண்ணையில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ரூபாய் சம்பளம்!
Share your comments