1. தோட்டக்கலை

நெல் சாகுபடிக்கு உதவும் நுண்ணுரம் வினியோகம்-50 % மானியத்தில்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Distribution of micronutrients for paddy cultivation - 50% subsidy!

ராமநாதபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் நெற்பயிருக்கான நுண்ணுாட்ட உரம் 50 சதவீதம் மானிய விலையில் விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு வாங்கிப் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல் சாகுபடி (Paddy cultivation)

ராமநாதபுரம் பகுதியில் 18ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இளம் பயிராக உள்ள நெற்பயிருக்கு நுண்ணுரம் இடுவதற்கு இதுவே ஏற்ற தக்க தருணமாகும்.

இதனைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு வேளாண், உழவர் நலத்துறையால், நெல் நுண்ணுாட்ட கலவைத் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நெல் நுண்ணுாட்டக் கலவையில் துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, போரான் சத்துக்கள் அடங்கியுள்ளன.

பயன்படுத்துவது எப்படி? (How to use?)

  • ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணுாட்ட உரத்தை மணலுடன் கலந்து நெல்வயலில் சீராகத் தூவ வேண்டும்.

  • நெற்பயிர் செழித்து இலைகள் வளர்வதுடன் தழைசத்து, மணிசத்து எளிதாக எடுத்துக்கொள்ளும்.

  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, மண்வளம் பெருகுகிறது.

50% மானிய விலை (50% subsidy price)

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டங்களில் 50 சதவீத மானிய விலையில் நுண்ணுாட்ட உரம் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

தகவல்
கோபாலகிருஷ்ணன்
ராமநாதபுரம் உதவி இயக்குனர்

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி கடன்!

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

English Summary: Distribution of micronutrients for paddy cultivation - 50% subsidy! Published on: 30 October 2021, 10:43 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.