1. தோட்டக்கலை

மண்ணின் மிகச் சிறந்த வளர்ச்சியூக்கி எது தெரியுமா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Do you know what is the best growth factor in the soil?
Credit : Hindu Tamil

 

மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தி, மண்ணின் வளத்தை ஊக்குவித்து, பல்வேறு சத்துக்களை வாரி வழங்கி இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது மண்புழுஉரம். 

அதனால்தான் மண்புழு உரம், திடக் கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவு பொருள்களான சாணம், இலை, தழை ஆகிய அத்தனையும் இருக்கின்றன. 45 முதல் 60 நாளில் மண்புழு உற்பத்தியாகிவிடுகிறது.

3000 வகைகள் (3000 types)

உலகத்தில் மண்புழுக்களில் 3000 வகைகள் கண்டறியப் பட்டுள்ளன. அவற்றில் இந்தியாவில் 384 வகைகள் உள்ளன. இதில் 6 வகையான மண் புழுக்கள் உரம் தயாரிக்க உகந்தவை.

மண்புழு உரம் உற்பத்தி (Earthworm compost production

மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்படும் தொட்டி, அகலம் ஒரு மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். இட வசதிக்கு ஏற்ப நீளம் இருக்கலாம். அரை அடி ஆழத்திற்குக் குழி வெட்டி சுற்று சுவர் அமைக்க வேண்டும்.

முதலில் தொட்டியின் அடியில் செங்கல் அல்லது கூழாங்கற்களைப் பரப்பி, இதற்கு மேல் மணலை பரப்பி பின்னர் பண்ணைக் கழிவுகளை நிரப்ப வேண்டும். அந்த குழியில் தென்னை நார் கழிவை நிரப்புவது நல்லது.

200 மண் புழுக்கள் (200 earthworms)

மக்காத குப்பைகள் இல்லாமல் பார்த்து கொள்வதுடன் அவ்வப்போது, தண்ணீர் தெளித்துவர வேண்டும். ஏனெனில் மக்காத எச்சங்கள் வெப்பத்தை வெளிப்படுத்தும். ஒரு சதுர மீட்டருக்கு 200 மண் புழுக்கள் என்றளவில் இட்டால் 3வது வாரத்திலேயே மண் புழுக்கள் தங்கள் எச்சத்தை கழிவுகளாக மேற்பரப்பில் வெளி தள்ளுகின்றன். வாரம் ஒருமுறை கூட இவற்றை சேகரிக்கலாம்.

மண்புழு உர அளவு (The amount of earthworm fertilizer)

மண்புழு உரம் நெல்லுக்கு, பருத்தி, மிளகாய் ஒரு டன்னும், கரும்பு, சூரியகாந்தி மற்றும் மக்காச்சோளத்துக்கு ஒன்றரை டன்னும் பயன்படுத்த வேண்டும்.

மண்புழுவின் பயன்கள் (Benefits of earthworms)

மண்புழு உரம் இடுவதால் மண் துகள்கள் ஒன்றாக இணைந்து ஒட்டி, குருணை போன்ற கட்டிகள் உருவாகி மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது.

மகசூலுக்கு (To yield)

இதனால் மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீர்பிடிப்புத் திறன் மேம்படுத்தப்படுகிறது. களிமண் பாங்கான மண்ணில் உள்ள குழம்புத் தன்மையைக் குறைத்து பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்பளிக்கிறது.

புதிய வேர்கள் (New roots)

மண்ணின் நீர்பிடிப்பு தன்மை அதிகரிப்பதால் பயிர்ப் பாதுகாப்பதுடன் கோடைகாலத்தில் மண்ணின் வெப்பநிலையைக் குறைத்து வேர் காயம் ஏற்படுவதை தடுக்கிறது. மழை காலங் களில் மண் அரிப்பை தடுப்பதுடன், மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் சத்துகள் எடுக்கும் புது வேர்கள் உருவாகும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்துகள் (Nutrients)

மண்ணில் கரையாதத் தாதுக்களை கரையச் செய்து தாவரங்களுக்குக் கிடைக்க கூடிய பேரூட்டச் சத்துகளையும், அனைத்து நுண்ணூட்டச் சத்துகளையும் சீரான அளவில் கொடுக்கிறது.

மண் வள மேம்பாடு (Soil resource development)

மண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய உலோகங்களை தற்காலிமாகக் கிரகித்துக் கொள்வதால் தூய்மையான நிலத்தடி நீருக்கும், மண் வள மேம்பாட்டிற்கும் வித்திடுகிறது.

வளர்ச்சி ஊக்கி (Growth stimulant)

மண்புழு உரத்தை மண்ணில் இடுவதால் மண்வளம் இயற்கையாகப் பாதுகாக்கபட்டு, பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.

மேலும் படிக்க...

கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.21¾ கோடி ஒதுக்கீடு!

121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!

English Summary: Do you know what is the best growth factor in the soil? Published on: 11 July 2021, 10:45 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.