வீட்டுக் காய்கறி தோட்டம் அமைக்க மானியத்தில் சொட்டு நீர் பாசனக் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.
அரசின் நடவடிக்கை (Government action)
வீட்டுத்தோட்டத்தின் மூலம் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு சில திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
யாரை அணுகலாம்? (Who can be approached?)
இதன் ஒருபகுதியாக, கோவையில், சொட்டு நீர் பாசனத்தில், வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைக்க, ரூ.720 மதிப்பிலான உபகரணங்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மானியத்தில் சொட்டு நீர் பாசனக் கருவி பெற விரும்புபவர்கள், தடாகம் சாலையிலுள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
விதைகள் (Seeds)
இதேபோல், வீட்டுக் காய்கறி தோட்டம் அமைக்க, ஆறு விதமான விதைகள், நுண்ணுயிர் உரங்கள், இயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியன, ரூ.510க்கு வினியோகிக்கப் படுகின்றன.
சொட்டு நீர் பாசன உபகரணங்கள் (Drip irrigation equipment)
இவற்றுடன், சுட்டெரிக்கும் வெயில் காலத்தில், காய்கறி பயிர்களுக்கு நீர் பாசனம் வழங்கிட, 10 சதுர மீட்டர் பரப்பளவுக்கான சொட்டு நீர் பாசன உபகரணங்கள், ரூ.720க்கு வழங்கப்படுகின்றன.
ரூ.400 மானியம் (Rs. 400 Subsidy)
ஆயிரத்து 120 ரூபாய் விலை உள்ள சொட்டு நீர் பாசன உபகரணங்கள், ரூ.720க்கு வழங்கப்படுகிறது. இதில், ரூ.400 மானியமாகும்.
ஆவணங்கள் (Documents)
இதற்கு, வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் ஆதார் அட்டையின் நகலுடன், கோவை தடாகம் சாலையிலுள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க...
மானியம் பெற்று தருவதாக விவசாயிகளிடம் மோசடி!
Share your comments