சட்டப் பேரவைத் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளுக்குக் கூலித் தொழிலாளர்கள் செல்வதால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு மணிலா அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
தீவிரப் பிரசாரம் (Intense Campaign)
தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அதன் கூட்டணிக்கட்சியினரும், மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்கள் அனல்பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாகத் தமிழகமே தேர்தல் களைகட்டியுள்ளது.
மணிலா சாகுபடி (Manila Cultivation)
இந்நிலையில் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமார் 2.500 ஹெக்டேர் பரப்பளவில் மணிலா சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் விளையும் மணிலாக்கள் எண்ணெய்ப் பிழிதிறன் அதிகம் கொண்டது. இதனால், குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மணிலா சந்தைக்கு பெயர் பெற்றது.
கார்த்திகையில் விதைப்பு (Sowing)
நிகழாண்டு கார்த்திகை பட்டத்தில் விவசாயிகள் மணிலா விதைப்பு செய்தனர். சராசரி அளவைவிட பருவமழை அதிகளவிலும், சீராகவும் பெய்ததால் மணிலா செடிகள் செழித்து வளர்ந்தன.
அறுவடைப்பணி (Harvesting)
கடந்த ஒரு மாத காலமாக மணிலா அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 சதவீத அறுவடைப் பணி முடிந்துவிட்டது.
இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளதால், பிரசார நிகழ்ச்சிகளுக்கு விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
கூலியாட்களுக்குத் தட்டுப்பாடு (Shortage of coolies)
இதன் காரணமாக, மணிலா அறுவடைப் பணிக்கு ஆள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில தொழிலாளர்களைக் கொண்டு மணிலா செடிகளை பறித்து, இயந்திரம் மூலம் மணிலாவை பிரித்தெடுத்து வருகின்றனர்.
இது குறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் கூறுகையில் :
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமார் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் மணிலா பயிரிடப்பட்டுள்ளது. பெரும்பாலான வயல்களில் அறுவடை முடிந்து விட்டது. தற்போது, தேர்தலை முன்னிட்டு கட்சியினர் பிரசாரத்துக்கு அதிகளவில் ஆள்களை அழைத்துச் செல்வதால் மணிலா அறுவடைக்கு யாரும் வருவதில்லை.
ரூ.1,400 வரை வாடகை (Rent up to Rs.1,400)
நிலத்தில் பறித்த செடிகளில் உள்ள மணிலாவை இயந்திரம் மூலம் பிரித்தெடுத்து வருகிறோம். இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,400 வரை வாடகை பெறுகின்றனர். தேவை அதிகம் என்பதால் மணிலா அறுவடை இயந்திரம் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
தென்னையில் வேரூட்டம் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்!
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!
Share your comments