1. தோட்டக்கலை

உரங்கள் விலை திடீர் உயர்வு- விவசாயிகள் தவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Fertilizer prices suddenly rise - farmers distress!

விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் உரங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் பெரும் இழப்பை எதிர்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், பின்னலாடை தொழில் உட்பட விவசாயம், கால்நடை வளர்ப்பு, கறிக்கோழி உற்பத்தி தொழில் உள்ளிட்டவையும் பரவலாக நடந்து வருகின்றன.காய்கறிகள், பயிர்களை தாக்கும் நோய், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள், பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.

திடீர் உயர்வு

அவ்வாறு, பயிர்களை பாதுகாக்கவும், விளைச்சலை அதிகப்படுத்தவும் விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலை சமீபமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பல்லடம் வட்டார விவசாயிகள் சிலர் கூறுகையில், இன்றைய சூழலில், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் சாகுபடி செய்ய முடியாது என்ற நிலை உள்ளது. வேளாண் துறை பரிந்துரைப்படி, ஆயிரக்கணக்கில் செலவு செய்து உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தியும் பாதிப்புகள் குறைவதில்லை. கடந்த சில மாதங்களாக, உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விலை விபரம்

மூன்று மாதத்துக்கு முன், 1,000 ரூபாயாக இருந்த பொட்டாஷ் உரம், தற்போது, 1,700 ரூபாய் ஆகவும், 28;28 ரகம், 1,500ல் இருந்து 1,900ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல், அம்மோனியம் சல்பேட், 850ல் இருந்து, 1,100ஆகவும், 1,200ஆக இருந்த டி.ஏ.பி., உரம், 2,000ஆகவும் அதிகரித்துள்ளன. அதிகப்படியாக பயன்படுத்தும் ரவுண்ட் அப் களைக்கொல்லி மருந்து, 380ல் இருந்து, 1,200 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதேபோல், பல்வேறு பூச்சி மருந்துகள், களைக்கொல்லிகளின் விலையும் அதிகரித்துள்ளன.

மானியம் 

விவசாயக் கூலி, உபகரணங்களின் உதிரி பாகங்கள், பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றின் வரிசையில், உரங்கள், களைக்கொல்லிகளின் விலையும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அதிகரித்து வரும் இவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதுடன், மானிய விலையில் இவற்றை வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

காணாமல் போன 1.50லட்சம் ரூபாய் பேனா- வலைவீசும் போலீஸ்!

நுண்ணீர் பாசனத்திற்குரூ.25,000 மானியம் - உடனே விண்ணப்பிக்க அழைப்பு!

English Summary: Fertilizer prices suddenly rise - farmers distress! (1) Published on: 09 July 2022, 09:34 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.