மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றிய கிராமங்களில் இயற்கை முறையில் காய்கறி, கீரைகள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
கத்திரிக்காய் சாகுபடிக்கு மானியம் (Subsidy for Eggplant)
வேளாண் அபிவிருத்தி திட்டம் 2020-21ல் 30 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை சாகுபடி செய்யப்படும் கீரைகள், காய்கறி வகைகளில் ரசாயன பூச்சிக்கொல்லி உரங்கள் பயன்படுத்தாமல் நஞ்சில்லா இயற்கை முறையில் உற்பத்தி செய்வோருக்கு இம்மானியம் வழங்கப்படுகிறது.
கீரை வகைகளுக்கு எக்டேருக்கு ரூ.2500ம், தக்காளி, வெண்டை, கத்தரிக்கு எக்டேருக்கு ரூ. 3750 வழங்கப்படும்.
ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 2 எக்டேருக்கு மானியம் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் திருநகர் பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலை அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்துப் பதிவு செய்து கொள்ளலாம்.
தகவல்
பேபி
உதவி இயக்குனர்
வேளாண்துறை
திருப்புரங்குன்றம்
மேலும் படிக்க...
வேம்பு நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.18,000மானியம்- விவசாயிகளுக்கு வாய்ப்பு!
எஸ்பிஐ KCC :கடனுக்கான இலக்கை இனி மொபைல் போனிலேயே செய்துகொள்ளலாம்!
Share your comments