நீர் பாசன கருவிகளை இலவசமாக பெறுவதற்கு, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
சாகுபடி (Cultivation)
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்தில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல், வேர்க்கடலை கரும்பு, சிறுதானியம், சவுக்கு, காய்கறி போன்ற பயிர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறு, குறு விவசாயிகளுக்கு, எளிய முறையில் நீர் பாசனம் செய்வதற்கான கருவிகள் வேளாண் துறையின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது
இது குறித்து திருத்தணி வேளாண் துறை அதிகாரி ஏழுமலை கூறியதாவது:
இலவச கருவிகள் (Free tools)
நுண்ணுயீர் பாசன திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு தெளிப்பு நீர், மழை துவோன் போன்ற, ரூ.36,000 மதிப்பிலான நீர் பாசன கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க அழைப்பு (Call to apply)
இதைப் பெற விரும்பும் விவசாயிகள், உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
தங்களது குடும்ப அடையாள அட்டை (Ration Card), ஆதார் கார்டு, சிறு, குறு விவசாயி சான்றுக்கான கணினி சிட்டா, அடங்கல், நில வரைப்படம் மற்றும் இரண்டு புகைப்படம் போன்ற ஆவணங்களுடன், அந்தந்த பகுதி வேளாண் உதவி அலுவலர்கள் அல்லது திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
வீட்டுவாடகை செலுத்தினால் ரூ.1000 கேஷ் பேக்- Paytm மின் சிறப்பு சலுகை!
Share your comments