கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்குக் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைத் தட்டுப்பாடு இன்றி, கிடைக்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அமலில் ஊரடங்கு (Curfew in effect)
தமிழகத்தில் கொரோனாப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, பரவலைத் தடுக்க ஏதுவாக, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்டவை அமலில் உள்ளன.
நண்பகல்12 மணி வரை (Until 12 noon)
இதைத்தவிர மே 6ம் தேதி முதல் பல்வேறுக் கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
கடைகளில் கூட்டம் (Crowd in stores)
குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமேக் காய்கறிகள், பழங்கள் மற்றும் பலசரக்குப் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என்பதால், இந்த நேரத்தில், கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
தோட்டக்கலைத்துறை நடவடிக்கை (Horticultural activity)
இதன் காரணமாக, அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை உயர வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்டங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை வழக்கம்போல் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பத் தோட்டக்கலைத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிகாரிகளுக்கு உத்தரவு (Order to the authorities)
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் இணைந்து, இப்பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும், உள்ள தோட்டகலை அலுவலர், தோட்டக்கலை உதவி அலுவலர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல இப்பணிகளைக் கண்காணிக்கவும், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க...
வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!
மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!
மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!
Share your comments