1. தோட்டக்கலை

மாடித்தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவை வகைகள் எவை?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
What are the types of topsoil mix for terrace garden?

Credit : Co-co Coir

தோட்டம் அமைக்க யாருக்குதான் ஆசை இல்லை. அதிலும் மாடித்தோட்டம் என்பதுதான் தற்போது சூழ்நிலைக்கு நம்மால் இயன்ற ஒன்று.

மண் தேர்வு (Soil selection)

சரி அவ்வாறு மாடித்தோட்டம் அமைக்க நாம் முன்வந்தாலும், அதற்கு மண் தேர்வு என்பது மிக மிக இன்றியமையாதது.

மண் கலவை (Soil composition)

எனவே மாடித்தோட்டத்தில் சரியான மண் கலவை என்பது உங்கள் விதையை விரைவாக முளைக்கச் செய்யும். அதுமட்டுமல்ல, நன்றாக வளர செய்யும், பூக்களைப் பூக்கவும், காய்களைக் காய்க்கவும் செய்யும் முக்கியக் காரணியாகும்.

களைகள் நீக்கம் (Weed removal)

சிறந்த மாடித் தோட்ட மண் கலவை என்பது களைகள் இன்றி இருப்பது. ஆனால் மண், மணல் பயன்படுத்தும் போது களைகள் அதிகம் வரலாம். எனவே நீங்கள் மண் கலவையைத் தொட்டி அல்லது பையில் போட்டு மூன்று நாள் தொடர்ந்து தண்ணீர் விட வேண்டும். அதில் களை அல்லது விதைகள் இருந்தால் முளைத்துவிடும். பின்பு நீங்கள் விதைகளைத் தூவலாம்.

எதிர்கொள்ளும் பிரச்னைகள் (Problems faced)

  • ஆரம்பத்தில் மண்கலவை நன்றாக இருந்தாலும் போகப் போக மண் இறுகிப் போய்விடும் செடிகளால் சரியாக சுவாசிக்க முடியாது.

  • வெண்டை , கத்தரி , முள்ளங்கி போன்ற ஒருபருவ பயிர்களும் பயன்படுத்தலாம். ஆனால் பூச்செடிகள், பழங்கள், பயிர் செய்தால் மண் கலவையைத் தவிர்த்துவிடலாம்.

  • மண் கலவையில் எடை சற்றுக் கூடுதலாக இருக்கும். எனவே அதனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது கடினம். அதே போல் ஒரு பையிலிருந்து மாறுவது சிரம்மமாக இருக்கும். மாடித்தோட்டத்திற்கு செடி நடுவதற்கு பல்வேறு வகை மண் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. 

மண் கலவை வகைகள்

  • மண் (Soil)

  • மணல் (Sand)

  • ரெட் சாயில் (Red Soil)

  • கோகோ பிட்  (Coco bit)

  • மண் புழு உரம் (Earthworm compost)

  • பெர்லைட் (Perlite)

  • வெர்மிகுலேட் (Vermiculite)

இவற்றில் ஏதாவது மூன்றை 1:1:1 என்ற சதவிகிதத்தில் கலந்து கொள்ளலாம் .

கலவை (Composition)

மண் +மணல்+ரெட் சாயில்
மண் +மணல்+மண் புழு உரம்
மண் +மணல்+பெர்லைட்
மண் +மணல்+வெர்மிகுலேட்
கோகோ பிட்+மண் புழு உரம்+பெர்லைட் (1:2:1)
கோகோ பிட்+மண் புழு உரம்+வெர்மிகுலேட் (1:2:1)
மண் புழு உரம்+பெர்லைட் (1:1)
மண் புழு உரம்+வெர்மிகுலேட் (1:1)
கோகோ பிட்+பெர்லைட் (1:1)
கோகோ பிட்+வெர்மிகுலேட் (1:1)
கோகோ பிட்+மண் புழு உரம் (1:1)

இவற்றில் எந்த கலவையை வேண்டுமானாலும் மாடித்தோட்டத்திற்குப் பயன்படுத்தி கொள்ளலாம். பழ மரங்கள், பூ வகைகள் செம்பருத்தி, மல்லிகை, பந்தல் காய்கறிகள் போன்றவற்றைப் பயிர் செய்ய முதல் 4 வகை மண் கலவைகளைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் படிக்க...

வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!

மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!

English Summary: What are the types of topsoil mix for terrace garden?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.