தமிழக அரசின் உன்னத திட்டங்களில் விவசாயிகளுக்கு பலவித நாற்றுகள் உற்பத்தி செய்து மலிவு விலையில் தோட்டக் கலைத் துறையின் நர்சரிகள் மூலம் கன்றுகள் வழங்கப்படுகின்றன. இதைப் பற்றிய குறிப்பான தகவலை, இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊடுபயிர்:
தோட்டக்கலைப் பயிர்களில் தென்னந் தோப்பில் ஊடுபயிராக நட ஏற்ற பாக்கு, மிளகு செடிகள், நடுவதினால் நல்ல மகசூல் பெறலாம். இந்த செடிகளுக்கு தேவையான உதவியை தோட்டக்கலைத்துறை வழங்குகிறது. இது நல்ல லாபம் தரக்கூடியது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இரட்டிப்பு லாபம்:
இரட்டிப்பு லாபம் பெறுவது எப்படி? இந்த கேள்விக்கான பதில் Double Cropping ஆகும். ஏற்கனவே இரட்டிப்பு லாபத்திற்கு ஊடுபயிர் செய்வது எப்படி? அதற்கு தோட்டக்கலைத் துறை எவ்வாறு உதவுகிறது என்று பார்த்தோம். அடுத்து வேலிப்பகுதியில் நட ஏற்ற மரக்கன்றுகளைப் பற்றி பார்க்கலாம். சில்வர் ஓக், தேக்கு, பலா, புளி, முதலிய மரக்கன்றுகள் லாபம் தரும் மரக்கன்றுகளாகும். இந்த மரக்கன்றுகள் தோட்டக்கலைத்துறையே வழங்குகின்றன. எனவே அங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் படிக்க: பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள்! மத்திய அரசின் புதிய திட்டம்!!
இதே போல எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா, மா, குருத்து ஒட்டு திசு வளர்ப்பு முறையில் வளர்க்க மாதுளை மற்றும் கறிவேப்பிலை, செடி முருங்கை, ரோஜா, மல்லிகை, ஜாதிக்காய் முதலிய பல மரக்கன்றுகளும் அரசு தோட்டக்கலைப் பண்ணை மூலம் வழங்கப்படுகின்றன.
நீர் வசதி உள்ள விவசாயிகள் ஆண்டு முழுவதும், இத்தகைய மரம் நடும் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2 அல்லது 3 புதிய பயன் தரும் தோட்டக்கலைப் பயிர்களை தனது பண்ணையில் தேர்வு செய்து நட்டால் தான் நல்ல பலன் கிடைக்கும். இதே போல பல தனியார் நர்சரி மூலம் விற்பனை செய்யப்படும் கன்றுகள் நல்ல நிலையில் உள்ளதா என ஆய்வு செய்து வாங்கவும் அவர்கள் பில் தரும் நிலையில் அரசிடம் பதிவு செய்ததா? என்று விசாரித்து அந்த நர்சரியில் மட்டுமே செடிகள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: மாதம் ரூ.2500 -போஸ்ட் ஆபீஸில் பணம் போட்டவர்களுக்கு ஜாக்பாட்!
தோட்டக்கலைத்துறையின் மூலம் மதிப்பு சான்று பெற்ற நர்சரிகள் மட்டுமே நல்ல கன்றுகளை தர இயலும். எனவே, விவசாயிகள் தமக்கு தேவைப்படும் கன்றுகளை அரசின் பண்ணைகளில் பெறவும். தம்பகுதி தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பரிந்துரை பெற்று நல்ல கன்றுகள் தேர்வு செய்யவும். தாம் புதிய நடவு செய்ய உள்ள பகுதியினை காண்பித்து உரிய பயிர் வகைகளைத் தேர்வு செய்யலாம்.
தகவல்: டாக். பா. இளங்கோவன்,
வேளாண்மை இணை இயக்குநர்,
காஞ்சிப்புரம்.
கைபேசி எண்: 9842001725
மற்ற மாவட்ட விவசாயிகளுக்காக Toll Free No: 1800 425 4444
மேலும் படிக்க:
சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்: எப்படி?
வேளாண் கழிவுகளில் இருந்து பயோ எத்தனால்: சென்னை ஐஐடி கண்டுபிப்பு!
Share your comments