விவசாயிகள் அரும்பாடுபட்டு வளர்க்கும் செடிகளுக்கு மிகப்பெரிய எதிரியே பூச்சிகள்தான்.
இதனால் பூச்சி மேலாண்மை என்பது சாகுபடியின் முக்கியத்துவம் பெறுகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பல பூச்சிக்கொல்லிகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும், மண்ணிற்கும், மனிதனுக்கும் நஞ்சில்லாதது எதுவென்றால், இயற்கை பூச்சிக்கொல்லிதான்.
அந்த வகையில், செடிகளில் புழு வகைப் பூச்சிகளை முற்றிலும் கட்டுப்படுத்தப் பயன்படும் இயற்கை பூச்சிக்கொல்லிகளில் ஒன்று, இஞ்சி-பூண்டு-மிளகாய் கரைசல்.
தேவையான பொருட்கள் (Ingredients)
பூண்டு -1கிலோ
பச்சை மிளகாய் - அரை கிலோ
இஞ்சி - அரை கிலோ
மண்ணெண்ணெய் - தேவையான அளவு
தயாரிப்பு முறை (Preparation)
- பூண்டு ஒரு கிலோ எடுத்து மண்ணெண்ணெயில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
-
பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைக்கொள்ளவும்.
-
அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
-
பின்னர் இவை அனைத்தையும் நன்கு கலந்து, ஒரு காடாத்துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். (ஜிலேபி பிழிவது போல் வைத்துக்கொள்ளவும்)
-
இவ்வாறு தயார் செய்த காடாத்துணிக் கலவையை 6 லிட்டர் தண்ணீரில் முக்கி, ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.
-
இந்தக் கரைசலை பூச்சித்தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியை 9.5 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளிக்க வேண்டும்.
-
தாக்குதல் அதிகமாக இருந்தால்,ஒரு லிட்டர் எடுத்து, 9 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகள் மீது தெளித்தால், புழு வகைப் பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படும்.
-
இதைத்தொடர்ந்து காதி சோப்பைத் தண்ணீரில் கரைத்து அடித்தால், அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலைச் செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும். இதன் மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.
-
இதை தயார் செய்யும்போது கையுறை அணிய வேண்டியது கட்டாயம்.
-
கை எரிச்சல் அதிகமாக இருக்கும் என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
-
மேலும் படிக்க...
நெல் பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோய் - கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!
தண்டுப்புழுக்களைத் தெறிக்க விடும் அக்னி அஸ்திரம்- தெரியுமா உங்களுக்கு!
Share your comments