பசுந்திவனம் என்பது கால்நடை வளர்ப்பில் இன்றியமையாதது. கால்நடை வளர்ப்பில் தீவனத்திற்கு என்று அதிகப்படியான செலவு செய்யப்படுகிறது. போதிய தீவனங்கள் தமிழகத்தில் இல்லாத காரணத்தால் வெளி மாநிலங்களில் இருந்து குறிப்பாக மஹாராஷ்டிராவிலிருந்து இறக்குமதி செய்யப் படுகிறது. தீவன செலவை குறைப்பதற்கும், எளிய முறையில் அதிக தீவனங்களை உற்பத்தி செய்யவும் ஹைட்ரோபோனிக் முறை கை கொடுக்கிறது.
மண்ணில்லாமல், ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பசுமைக்குடில் அமைத்து தீவனம் வளர்க்கும் முறைகள் விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. ஹைட்ரோபோனிக் முறையில் பசுந்தீவனம் வளர்க்க குறைவான தண்ணீர் வசதி மற்றும் போதுமான இட வசதி, இவை மட்டுமே போதும்.
பசுந்திவன வளர்ப்பு மற்றும் அரசு மானியம்
- தங்களின் வசதிக்கு ஏற்ப ஒரு நிழல் குடில் ஒன்றை அமைத்து கொள்ளவும். தரைதளம் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் தரையில் மணல் பரப்பி வைக்க வேண்டும். மிக குறைந்த விளக்கு வெளிச்சம் போதுமானது.
- பாலிவினைல் குளோரைடு பைப்புகள், பாலி புரொபைலைன் பிளாஸ்டிக் தட்டுகள், மின்மோட்டார் மின் இணைப்பு வசதி, கோணிச் சாக்கு மற்றும் குளிர்நிலையை அறிய தெர்மாமீட்டர் அவசியம். இந்த உபகரணம் 8 அடுக்குகள் மற்றும் 16 தட்டுகளைக் கொண்டது.
- தீவன தட்டின் அடிப்பகுதியில் 6-7 துளைகள் இட வேண்டும். நீர் சிறிது சிரிதாக வெளியேறுவதற்கும், துளைகள் அடை படாமலும் பார்த்து கொள்ள வேண்டும். (தட்டின் நீளம் அகலம் 1 முதல் 1.5 அடி இருந்தால் நன்றாக இருக்கும்).
- முதலில் தரமான விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது விதை அடிபடாமல், உடைந்து மற்றும் சொத்தை இல்லாமல் இருத்தல் அவசியம். பார்லி, கோதுமை, மக்காச் சோளம், கொள்ளு போன்றவை தீவன வளர்ப்பிற்கு உகந்ததாகும். இவைகளில் மக்காச் சோளம் விலை குறைவு என்பதால் பெரும்பாலானவர்கள். இதே தேர்வு செய்கிறார்கள்.
- தேர்தெடுத்த விதைகலை ஒரு சணல் சாக்கில் கட்டி ஒரு நாள் முழுவதும் 24 மணி நேரம் நீரில் மூழகும் படி செய்யவும். (முடிந்தால் கடைசி 2 மணி நேரம் பீஜாமிர்தம் விதை நேர்த்தி செய்யவும்) அவ்வாறு செய்ய இயலவில்லை என்றால் சிறிது கோமியம் சேரத்துக் கொள்ளவும். இது விதையின் முளைப்பு திறனை அதிகப்படுத்தும். மறுநாள் நீரில் இருந்து எடுத்து அதிக வெளிச்சம் இல்லாத இடத்தில் வைக்கவும்.
- மூன்றாம் தினங்களுக்கு பிறகு சணல் சாக்கில் இருந்து எடுத்து ஒவ்வொரு தட்டிற்கு 400 கிராம் விதம் ஒன்றின் மேல் ஒன்று படாமல் பரப்பி வைக்க வேண்டும்.
- அறையின் வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி வரை இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அதே போன்று காற்றின் ஈரப்பதம் 80 முதல் 85 சதவிகிதம் இருக்க வேண்டும்.
- தண்ணீரை தெளிக்க வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பகலில் மட்டும் தண்ணீர் தெளித்துவரவும். தண்ணீர் தேவையை மேலும் குறைப்பதற்கு நீர் தெளிப்பான், எலக்ட்ரிக் ஸ்பிரேயர் அல்லது சாதாரண தெளிப்பான் பொருத்தி நீர் தெளிக்கலாம்.
- பயிர்கள் பெரிதாக தட்டுக்களை நன்கு வெளிச்சம் உள்ளவாறு மாற்றி வரிசைகளில் வைக்கவும். 8 முதல் 10 நாட்களில் நன்கு வளர்ச்சி அடைந்து கால்நடைகளுக்கு கொடுப்பதற்கு தயாராக இருக்கும். இதுவே அரோக்கியமான மற்றும் போதுமான வளர்ச்சி ஆகும்.
- இம்முறை மூலம் வாரத்திற்கு 1 லிட்டர் தண்ணீரில் தோரயமாக 1 கிலோ முதல் 8 நாட்களில் 8 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும்.
- நன்கு வளர்ந்த தீவனத்தின் கடைசி தினங்கள் அதாவது 6 வது, 7 வது நாட்களில் எதாவது ஒரு வளர்ச்சி ஊக்கி சேர்த்து தெளித்தல் சிறந்தது. உதரணமாக 4-5 சதம் இளநீர் அல்லது ஜீவாமிர்தம் அல்லது அமுதக் கரைசல் அல்லது மீன் அமிலம் அல்லது இ.ம் அல்லது வேப்பிலை அல்லது கற்றாலை அல்லது புங்கன் இலை கரைசல் என இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
- கால்நடைகளுக்கு கொடுக்கும் முன்பு ஒரு முறை சுத்தமான தண்ணீர் தெளித்து சிறிது நேரம் கழித்து கொடுக்கவும். இதில் மண் இல்லததால் நேரடியாக கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.
- மண்ணில்லா தீவனத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்
- ஈரப்பதம் 80 சதம்
- புரதம் 14 சதம்
- நார்ச்சத்து 13.54 சதம்
- நைட்ரஜன் அல்லாத சத்துக்கள் 65 சதவீதம்
- வைட்டமின்ஸ், காப்பர், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னிசியம், ஜிங்க் போன்ற பல சத்துக்கள் நிறைந்து உள்ளன.
- மண்ணில்லா தீவனம் வளர்க்க அரசு மானியமாக 75 சதவிகிதத்துடன் 25 சதவிகித தொகையை மட்டும் செலுத்தி தேவையான ஹைட்ராபோனிக் பெட்டிகளை கால்நடைத்துறை அலுவலகத்தில் வாங்கிக்கொள்ளலாம்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments