மண் என்பது உலகின் இயற்கை ஆதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளமாகும். நாம் தொடர்ந்து பயிர் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் இரசாயன உரங்களை மட்டும் இட்டு விவசாயம் செய்து வருகின்றோம். இதனால் மண்ணின் பௌதிக, இரசாயன மற்றும் உயிரியல் பண்புகளில் மாற்றம் ஏற்பட்டு மண்ணின் நலமும் வளமும் சீர்கெட்டு வருகிறது. மண்வளம் மற்றும் பயிர் அதிகரிப்பு மண்ணின் தன்மையை பொறுத்தே அமைகிறது. இந்த மண் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் இயற்கையின் செயல்பாட்டால் ஆதி பாறைகளினின்று மெல்ல மெல்ல உருவானதே! இத்தகைய செயல்பாட்டால் பாறைகளே மண்ணாக உருவெடுத்து நமக்கு கிடைத்த பேறு எனலாம். இவ்வாறு மண் உருவான முறைகளை பொறுத்து மணல்சாரி, செவ்வல், கரிசல், சரளைக்கலந்து என்றும் இவற்றில் சில இணைந்தும் வகைப்படுகின்றன. மழை, காற்று, சூரிய ஒளி போன்றவற்றை மண்துகள்களுடன் இணைந்து வண்டல் மண், படுக்கை மண், போன்ற நல்ல மண்கண்டங்கள் பல உருவாயின. மேலும் அத்தகைய சூழல்களுக்கேற்ப பல்வேறு அமிலங்கள் உருவாகி உவர்மண், கலர்மண், அமிலமண், சுண்ணாம்பு கலந்த மண் போன்ற பிரச்சைகளை மிகுந்த மண் வகைகளும் உருவாயின. அத்துடன் நீண்டு நெடிந்துள்ள கடற்கரையோர குறுமண்ணும் ஒருவகையாகும்.
மண் வளம் என்றால் என்ன?
பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஏற்ற சூழலையும் அளிக்கும் திறனே மண் வளம் எனப்படும். மண் என்பது ஒரு உயிருள்ள பொருள். இதன் வளம், அதிலுள்ள அங்ககச் சந்தை பொறுத்தே உள்ளது. மண்ணின் தன்மைகளான அங்கக பொருட்கள், கார அமில நிலை , உயிரியல் இயக்கம், நீர் கொள்திறன், சமச்சீரான பயிர் ஊடங்கள், வலுவான மண் கட்டமைப்பு, ஏற்ற மண் வெப்பம், காற்றோட்டம் உள்வடிகால் ஆகியவை மண்ணின் வளத்தை நிர்ணயிக்கின்றன. ஆனால் மண்ணின் தன்மை அதன் இயற்பியல், வேதியியல், மற்றும் உயிரியல் வகையில் அறிய படுகிறது.
மண்வளம் மேம்பாட்டுத் தொழில்நுட்பம்
மண்ணின் அங்ககக் கரிமத்தின் அளவை அதிகரித்தல்.
மண் ஆய்வின்படி பயிர்களுக்கு சமச்சீர் உரமிடுதல்.
உயர் உரங்களின் பயன்பாடு.
பசுந்தாள் உரமிடுதல்.
ஒருங்கிணைந்த உர நிர்வாகம்.
மண் மூடு பயிர்களின் பயன்பாடுகள். பயிர் சுழற்சி முறைகள்.
மண் அரிமாணத்தை தடுத்தல்.
மண் மேலாண்மையில் இயற்கை உரங்கள்
மண் என்பது ஒரு உயிருள்ள பொருள். இதன் வளம் அதிலுள்ள அங்ககச் சந்தைப் பொறுத்தே உள்ளது. நிலைத்து நின்று தொடர்ந்து மண் நளவளத்தை பாதுகாக்கும் திறனுள்ள, இந்த அங்ககச் சத்தின் அளவு, நிலத்தில் 2 முதல் 3 சதவிகிதம் வரை இருக்க வேண்டும். ஆனால் வெப்ப மண்டல நிலங்களின் இச்சத்து ௦.05 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டின் மண் வகைகளில் 1970 ஆம் ஆண்டுகளில் கரிம அளவு சதவிகிதம் 0.80 ஆக இருந்தது. ஆனால் தற்பொழுது 0.41 ஆகக் குறைந்துவிட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நீண்டகால உரப்பரிசோதனை முடிவுகள் அங்கக உரங்களை ஆண்டுதோறும் இட்டால் மட்டுமே மண்ணின் அங்ககக் கரிம வளம் கூடும், என்பதை பறைசாற்றுகின்றன. எனவே இயற்கை மற்றும் உயிர் உரங்களை அதிக அளவில் பயன்படுத்தி நிலத்தில் அங்ககச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும்.
இயறக்கை உரங்களை இடுவதன் நன்மைகள்
மண்ணில் உள்ள பயிருணவுச் சத்துக்கள் கரைக்கப்பட்டு பயிருக்கு கிடைக்கும் நிலையில் மாற்றப்படுகிறது. மண்ணில் நீர் கொள்ளும்திறன் கூடுகிறதது. மண்ணின் தட்பவெட்ப நிலை சீராக்கப்படுகிறது. மண்ணின் காற்றோட்ட நிலை கூடுகிறதது.
நீர் ஊடுருவிச் செல்லும் திறன், நீர் கடத்தும் திறன் மேம்பாடு மற்றும் மண்ணில் ஈரத்தை நிலை நிறுத்துகிறது. மண்ணில் வடிகால் வசதியும் பெறுகிறது. மண்ணின் பரும அடர்த்தி சீராக்கப்படுகிறது. மண்ணின் நயமும் கட்டமைப்பும் மேம்படுத்தப்படுகிறது.
மண் துகள்களின் சேர்க்கை ஏற்பட்டு நுண்ணுருண்டைகள் உண்டாக உதவுகிறது.
கடினமான களிமண் பூமியை இளகச்செய்யவும், மணற்பாங்கான பூமி நல்ல நயமுள்ளதாகி , நீர் கொள்திறன் பெறவும் உதவுகிறது. மண்ணில் அயனி மாற்றம் நடக்கவும், நேர் மின்னோட்டம் பெற்ற அயனிகள் மற்றும் திறன் கூடவும் உதவுகிறது. மண்ணின் களர், அமில நிலை மாற்றத்தை குறைகிறது. களர் உவர் நிலத்தை சீராக்குகிறது. பயிருணவுச் சத்துக்கள் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கவும் அவைகளின் இழப்பை குறைக்கவும் , அவைகளின் உபயோகத் திறனை கூடவும் உதவுகிறது. மண்ணில் வாழும் எண்ணற்ற நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
தீமை பயக்கும் நுண்ணுயிர்களும் நச்சுண்ணிகளும், நூற்புழுக்களும் அளிக்கப்படுகின்றன. மண்ணில் இடப்படுகின்ற பூச்சி, பூஞ்சாண மற்றும் களைக் கொல்லிகளின் வீரியம் பாதுகாக்கப்பட்டு பூச்சி, நோயிகள மற்றும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன். மேலும் இம்மருந்துகளால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுதலை குறைகின்றன.
பயிர் ஊக்கிகளாகச் செயல்ப்படுகின்றன. இரசாயன அங்ககக் கூட்டுப்பொருளை உண்டாக்கி நுண்ணூட்டங்களின் தேவை சரி செய்யப்படுகின்றன. நிலத்திலும், நிலத்தடி நீரிலும், காற்றிலும் ஏற்படுகின்ற சுற்றுப்புறச்சூழலின் பாதிப்பை குறைக்க உதவுகிறது. மக்கக்கூடிய கழிவுகளான பயிர்கழிவுகள், காய்கறிகளிவுகள், கால்நடைகளிவுகளை, வேளாண் ஆலைச் சார்ந்த கழிவுகள் ஆகியவை இயற்கை உரங்களை தயாரிக்க உகந்த பொருள்களாகும்.
இக்கழிவுகளை மக்க வைத்து உரமாக்கும் பொழுது கழிவுகளில் உள்ள சத்துக்களை பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலைக்கு மாற்றப்படுகின்றன. இவ்வாறு கிடைக்கப்பெற்ற இயற்கை உரங்கள் மண்ணின் வளத்தையும் மண்ணின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
நிலையான வேளாண்மைக்கு ஒருங்கிணைந்த பயிரூட்ட மேலாண்மை
பெருகிவரும் மக்கள் தொகையின் தேவைகளை பூர்த்தி செய்ய நாம் தீவிர வேளாண்மையை தொடர வேண்டியுள்ளது. தீவிர வேளாண்மையில் மண்ணிலிருந்து பயிரூட்டச் சத்துக்களை இரசாயன உரத்தின் மூலம் கொடுப்பதை விட, பயிர்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் ஆங்காங்கே மண்வளம் குறைந்து வருவது தென்படுகிறது. இந்நிலை நீடித்தால் உணவு உற்பத்தியில் தன்னிறைவற்ற நிலை நமது நாட்டில் ஏற்படும். ஆகையால் இதனை நிவர்த்தி செய்வது இன்றைய தலைமுறையின் தலையாய கடமையாகும்.
ஒருங்கிணைந்த பயிரூட்ட மேலாண்மை
பயிருக்குத் தேவையான ஊட்டங்களை அங்கக உரங்கள் (பசுந்தாள் உரங்கள், தொழுஉரம், கம்போஸ்ட்), மண் ஆய்வின் அடிப்படையில் அமைந்த சமச்சீர் இரசாயன உரப் பயன்பாடு மற்றும் உயிர் உரங்கள் மூலம் ஒருங்கிணைத்து அளிப்பதே ஒருங்கிணைந்த பயிரூட்டச்சத்து மேலாண்மை ஆகும்.
இதனால் பயிருக்கு தேவையான ஊட்டங்களை தேவைக்கேற்ப சீராக கொடுப்பதுடன் இரசாயன உரங்களின் செலவினைக் குறைக்கலாம். இதன் மூலம் மன்னனின் இயற்பியல் , வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகள் மேம்படுகின்றன.
மண்வள மேலாண்மை அணுகு முறைகள்
இயற்பியல் இடர்பாடுகளை நீக்கும் மேலாண்மை, அடிமண் இறுக்கம் , மேல் மன்ன இறுக்கம், குறைந்த மண் ஆழம், குறைந்த நீர் பிடிப்புத் திறன், குறைந்த நீர் உட்புகும் திறன், அதிக அளவு உப்புத்தன்மை மற்றும் அளவுக்கு மீறிய மண் வெப்பம் ஆகியவை விதை விதைத்ததிலிருந்து அறுவடை காலம் வரை பயிர்களின் பல்வேறு நிலைகளில் பாதிப்புகளை உண்டாக்குவதால் பயிர் விளைச்சல் பெருமளவு குறைகின்றது. இத்தகைய இடர்பாட்டுகளை நிவர்த்தி செய்வது மண்வளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை.
வளம் நிறைந்த மண்ணின் தன்மைகள்
எல்லாப் பயிர் உணவுச் சத்துக்களும் தேவையான அளவு எளிதில் கிடைக்கும் நிலையில் இருக்க வேண்டும். மண் கடினமானதாகவோ அல்லது மணல்பாங்கானதாகவோ இருக்கக் கூடாது. வடிகால் வசதியும், காற்றோட்டமும் உடையதாக இருக்க வேண்டும். நீர் கொள்திறன் அதிகம் உள்ளதாக இருக்க வேண்டும். மண் நயம் உடையதாகவும், பரும அடர்த்தி சீராகவும் இருக்க வேண்டும். களர், உவர் மற்றும் அமிலத்தன்மை இருக்க கூடாது.
மண் துகள்கள் சேர்க்கை உடையதாக,குறிப்பாக களி நுண்ணுருண்டைகள் அதிகம் உள்ளதாக இருக்க வேண்டும். அயனிகள் திறம் பெற்றிருக்க வேண்டும். பயிர்களின் வேர் ஆழமாகவும் பறவியும் வளர்வதற்கு ஏதுவாக இருக்க வேண்டும். இவற்றில் எந்த ஒரு குறை இருந்தாலும் மண் வளம் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறையும்.
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN
Share your comments